மரண தண்டனையிலிருந்து தப்பிய ஆசியா பீவி இங்கிலாந்தில் தஞ்சமடைய உள்ளதாக தகவல்

கராச்சி: மரண தண்டனையிலிருந்து தப்பித்த பாகிஸ்தானை சேர்ந்த ஆசியா பீவிக்கு இங்கிலாந்து அடைக்கலம் அளிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக பிரிட்டன் முன்னாள் வெளியுறவு அமைச்சர் ஜான்சன், இங்கிலாந்து அரசுக்கு எழுதியுள்ள கடிதத்தில் ஆசியா பீவிக்கு  தஞ்சமளிக்க கேட்டு கொண்டுள்ளார். இஸ்லாம் மதத்தை இழிவுப்படுத்தி பேசிய புகாரில் மரண தண்டனையை எதிர்நோக்கி இருந்த ஆசியா பீவிவை, கடந்த மாதம் அந்நாட்டு உச்சநீதிமன்றம் விடுதலை செய்தது குறிப்பிடத்தக்கது. பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம் இடான் வாலி கிராமத்தைச் சேர்ந்த கத்தோலிக்க கிறிஸ்தவர் ஆசியா பீவி. கடந்த 2009 ஜூன் மாதம் இறை தூதர் முகமது நபிக்கு எதிராக அவர் அவதூறாக பேசியதாக குற்றம் சாட்டப்பட்டது.

இதன்பேரில் தொடரப்பட்ட இறைநிந்தனை வழக்கில் கடந்த 2010-ல் விசாரணை நீதிமன்றம் அவருக்கு மரண தண்டனை விதித்தது. கடந்த 2014 அக்டோபரில் லாகூர் உயர் நீதிமன்றம் அவரது மரண தண்டனையை உறுதி செய்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், ஆசியா பீவிக்கு எதிராக போதிய சாட்சி, ஆதாரங்கள் இல்லை என்று கூறி, கடந்த அக்டோபர் 31-ம் தேதி அவரை விடுதலை செய்தது. எட்டு ஆண்டுகளுக்கும் மேலாக தனிமை சிறையில் வாடிய அவர் சில நாட்களுக்கு முன்பு விடுதலை செய்யப்பட்டார். இந்நிலையில் முதலில் அவர் நெதர்லாந்திற்கு செல்ல உள்ளதாக தகவல் வெளியான நிலையில், தற்போது அவர் இங்கிலாந்தில் தஞ்சமடைய உள்ளதாக கூறப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: