ரஃபேல் போர் விமானம் தொடர்பான வழக்கு... உச்சநீதிமன்றத்தில் விமானப்படை அதிகாரிகள் நேரில் ஆஜராகி விளக்கம்

டெல்லி: ரஃபேல் போர் விமானம் குறித்து வழக்கில் உச்சநீதிமன்றத்தில் விமானப்படை அதிகாரிகள் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளனர்.  விமானப்படை அதிகாரிகள் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு உச்சநீதிமன்ற உத்தரவிட்ட நிலையில் விமானப்படை அதிகாரி அனில் கோல்சா, வி.ஆர்.சௌத்ரி ஆகியோர் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளார்.  

அப்போது இந்தியாவில் தயாரிக்கப்பட்ட விமானங்கள் விமானப்படையில் உள்ளனவா? என்று நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு LCA விமானம் இந்தியாவில் தயாரிக்கப்பட்டவை என  விமானப்படை அதிகாரி விளக்கம் அளித்துள்ளார். மேலும் நீதிபதி, இந்தியாவில் எந்த தலைமுறை போர் விமானங்கள் உள்ளது? என கேட்டுள்ளனர். அதற்கு பதில் அளித்த அதிகாரி இந்திய விமானப்படையில் 4-வது தலைமுறை விமானங்கள் உள்ளது என அவர் தெரிவித்தார். இதனை அடுத்து விமானப்படையில் புதிதாக சேர்க்கப்பட்ட விமானம் எது? என்றும் நீதிபதி வினவினார். விமானப்படை அதிகாரி அதற்கு சுகோய்-30 விமானம் 40-வது தலைமுறை விமானம் என அவர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் குறித்து நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு இந்திய விமானப்படை அதிகாரிக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் உத்தரவிட்டார். ரஃபேல் போர் விமான ஒப்பந்தத்தில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக கூறி பிரபல வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் உள்ளிட்டோர் தொடர்ந்த வழக்கு மீதான விசாரணை இன்று உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றது.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு முன்னிலையில் நடைபெற்ற இந்த விசாரணையின்போது, மத்திய அரசு சார்பில் அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால் வாதிட்டார்.  விமானப்படை வீரர் தான் ரஃபேல் போர் விமானம் குறித்து விவாதிக்கலாம் என உச்சநீதிமன்றத்தில் ரஃபேல் வழக்கு விசாரணையின் போது வழக்கறிஞர் வாதித்துள்ளார். மேலும் ரஃபேல் தொடர்பான அனைத்து விவரங்களையும் நாடளுமன்றத்தில் தெரிவிக்க முடியாது என்றும் கூறினார். இதனைத்தொடர்ந்து தகவல் அறியும் சட்டம் ரஃபேல் கொள்முதலுக்கு செல்லாது எனவும் அவர் வாதிட்டுள்ளார்.  

அதற்கு எதிர்தரப்பு வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் மத்திய அரசு நாடாளுமன்றத்திலேயே விலை விபரங்களை தெரிவித்துவிட்ட நிலையில் தற்போது ரகசியம் காப்பது சரி இல்லை என்று தனது வாதத்தை முன் வைத்தார். மேலும் முதலில் போடப்பட்ட ரஃபேல் விமான ஒப்பந்தத்தை விட, தற்போது  40 விழுக்காடு அளவுக்கு விலை உயர்த்தப்பட்டுள்ளது என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: