'கஜா'-வை எதிர்கொள்ள புதுச்சேரி அரசு ஆயத்தம் : முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்

காரைக்கால்: கஜா புயலை எதிர்கொள்ள தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டிருப்பதாக புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி கூறியுள்ளார். காரைக்காலில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தாழ்வான பகுதிகளில் உள்ள மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக கூறினார். மேலும் அவர்களுக்கு தேவயான அடிப்படை வசதிகள், உணவுப்பொருட்கள் உள்ளிட்டவற்றை வழங்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக கூறினார்.  

புயலை எதிர்கொள்ளும் விதமா அனைத்து துறை அதிகாரிகளும் முடுக்கி விடப்பட்டுள்ளதாகவும் நாராயணசாமி கூறியுள்ளார். குடிசைகளில் வாழம் மக்களை பள்ளிகள், சமுதாய நலக்கூடங்கள் உள்ளிட்டவற்றில் பாதுகாப்பாக தங்க வைக்கவும் , முறையான குடிநீர் கிடைப்பதற்கும் ஏற்பாடுகள் செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக கூறினார். கிராமம், நகரம் எதுவாக இருந்தாலும் மின்சாரம் தடைபட்டால் எஞ்சின்கள் மூலமாக தண்ணீரை ஏற்றி மக்களுக்கு விநியோகிக்கவும், வெள்ளம் வந்தால் தண்ணீரை வெளியேற்றவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

மேலும் பேசிய அவர் கடலோர பகுதிகளில் உள்ள மீனவர்கள் தங்களது படகுகளை பாதுகாப்பாக வைப்பதற்கான ஆயத்த பணிகளை செய்யவும் முடிவெடுக்கப்பட்டுள்ளதாக கூறினார். புதுவை அரசு கஜா புயலை எதிர்கொள்ள தயாராக இருப்பதாக கூறினார். புயல் மற்றும் மழையை பொறுத்து நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை விடுவது குறித்து அறிவிகக்ப்படும் என்றார்.      முன்னதாக புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து அதிகாரிகளுடன் நாராயணசாமி ஆலோசித்தது குறிப்பிடத்தக்கது.    

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: