தான் படித்த பள்ளியறையில் பழைய நினைவுகளை பகிர்ந்த அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர்

வாணியம்பாடி: வாணியம்பாடியில் இயங்கி வரும்  பள்ளிக்கு அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர்  அனந்த கிருஷ்ணன் சென்று, தான் பயின்ற பள்ளிவகுப்பறையில் அமர்ந்து, பழைய நினைவுகளை பகிர்ந்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வாணியம்பாடி பெரியப்பேட்டை நகராட்சி நடுநிலைப் பள்ளியில் 1ம் வகுப்பு முதல், 5ம் வகுப்பு வரை பயின்று, அதன் பின்னர் பள்ளிக்கல்வி, கல்லூரிக்கல்வி, முடித்து தமிழகத்தின்  அண்ணா பல்கலைக்கழகத்தில் துணை வேந்தராக பணியாற்றியவர் அனந்த கிருஷ்ணன்.

இவரின் தந்தை முனிரத்தினம் நினைவாக அவரது பெயரில் கல்வி அறக்கட்டளை துவங்கி, இப்பள்ளியின் வளர்ச்சிக்காக 4 லட்சம் நிதி அளித்துள்ளார். மேலும், 1 லட்சம் மதிப்பிலான ஸ்மார்ட் வகுப்புகளுக்கு தேவையான, பொருட்களை வாங்கித் தருவதாக உறுதி அளித்துள்ளார். இவர் பெரியப்பேட்டை நகராட்சி நடுநிலைப்பள்ளியின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்ததோடு மட்டுமல்லாது, பெரியப்பேட்டை அழகு மாரியம்மன்  கோயிலுக்கு கட்டிட நிதியும்  அளித்துள்ளார். இவருக்கு, வாணியம்பாடி நகர திமுக பொறுப்பாளர் வி.எஸ்.சாரதிகுமார் தலைமையில் அதிர்வேட்டு முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: