கஜா புயல் எதிரொலி... நாகை, கடலூர் மாவட்டத்தில் பள்ளி கல்லூரிக்கு நாளை விடுமுறை

கடலூர்: கஜா புயல் காரணமாக நாகை மற்றும் கடலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை என ஆட்சியர் அன்புச்செல்வன் அறிவித்துள்ளார். புயல் நாளை கரையைக் கடக்கவுள்ள நிலையில்  முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆட்சியர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இதனைத்தொடர்ந்து கஜா புயல் குறித்து பொதுமக்கள் பீதி அடைய வேண்டாம் என கடலூர் மாவட்டத்துக்கான சிறப்பு அதிகாரி ககன்தீப் சிங் பேடி வேண்டுகோள் விடுத்துள்ளார். தாழ்வான பகுதி மக்களை இன்று இரவுக்குள் பாதுகாப்பு மையங்களில் தங்க வைக்க வேண்டும் எனவும், மேலும் குடிசை வீடுகளில் உள்ள மக்கள் பாதுகாப்பு மையங்களுக்கு செல்ல அவர் அறிவுறுத்தியுள்ளார்.

கடலூர் முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை முடுக்கிவிடப்பட்டுள்ளது. 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபட அதிகாரிகளுக்கு அவர் அறிவுறுத்தியுள்ளார். மேலும் கடலூரில் உள்ள செல்போன் டவர்கள் அனைத்தையும் கண்காணிக்கவும் அவர் உத்தரவிட்டுள்ளார். 84,000 ஹெக்டேர் பயிர்களை புயலுக்கு முன் காப்பீடு செய்ய கடலூர் மாவட்டத்துக்கான சிறப்பு அதிகாரி ககன்தீப் சிங் பேடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: