எம்.எல்.ஏக்களை விட எம்.பிக்களின் பணி நாட்கள் அதிகம்: ஆய்வில் தகவல்

புதுடெல்லி: எம்.எல்.ஏக்களை ஒப்பிடுகையில் எம்.பிக்களே அதிக நாட்கள் பணியில் இருப்பது ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. 2011ம் ஆண்டு முதல் 2016ம் ஆண்டு வரை அனைத்து மாநிலங்களில் நடந்த பேரவை கூட்டங்கள் மற்றும் நாடாளுமன்ற கூட்டங்களை கொண்டு நடத்தப்பட்ட ஆய்வின் முடிவு வெளியாகியுள்ளது. இதன்படி, ஓராண்டில் நாடு முழுவதும் உள்ள பேரவைகளில் சராசரியாக கூட்டம் நடக்கும் நாட்களின் எண்ணிக்கை 28 ஆக உள்ளது. அதுவே நாடாளுமன்ற மக்களவை நடக்கும் நாட்களின் எண்ணிக்கை 70, மாநிலங்களவை செயல்படும் நாட்களின் எண்ணிக்கை 69 எனக் கூறப்பட்டுள்ளது. அதிகபட்சமாக கேரளா மற்றும் கர்நாடகாவில் 46 நாட்கள் பேரவை கூட்டங்கள் நடந்துள்ளன. மேலும் மஹாராஷ்டிரா மாநிலத்தில் 45, ஒடிசாவில் 42 என பேரவை கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன.

குறைந்தபட்சமாக நாகாலாந்தில் 10 நாட்களும், டெல்லியில் 13 நாட்களும் தான் பேரவை செயல்பட்டுள்ளது. இதன் மூலம் எம்எல்ஏக்களை விட எம்.பிக்களே அதிக நாட்கள் பணியில் இருப்பது தெரியவந்துள்ளது. இதுபோன்று அருணாச்சலப்பிரதேசம், மிசோரம், பஞ்சாப், திரிபுரா மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் 2011ம் ஆண்டில் இருந்து 2016ம் ஆண்டு வரை நடத்தப்பட்ட மாநிலங்களவை கூட்டத்தின் விவரங்கள் இன்னும் வெளிவரவில்லை. மேலும் கடந்த 5 ஆண்டுகளில் அதாவது 2014ம் ஆண்டு முதல் 2018ம் ஆண்டு வரை மொத்தம் 135 நாடாளுமன்ற கூட்டம் நடைபெற்றுள்ளதாக ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: