2-வது காலாண்டில் ரூ.6.52 கோடி லாபம் ஈட்டிய தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனம்

சென்னை: 2018-ம் ஆண்டினுடைய 2-வது காலாண்டில் ரூ.6.52 கோடி லாபம் ஈட்டியுள்ளதாக தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனம தெரிவித்துள்ளது. 2016-ல் பருவ மழை பொய்த்ததால், கடந்த நிதியாண்டில் காகிதம் தயாரிக்க போதிய தண்ணீர் இல்லாததாலும், மரக்கூழ் கிடைக்காததாலும் டிஎன்பிஎல் நிறுவனத்தின் உற்பத்தியில் சரிவு ஏற்பட்டது. இதன் காரணமாக 2017-18 நிதியாண்டின் முதல் காலாண்டில் ரூ.89 கோடி நஷ்டம் ஏற்பட்டது. 2017 மற்றும் 2018-ல் பெய்த பருவமழையின் காரணமாக, டி.என்.பி.எல் நிறுவனம் தனது முழு உற்பத்தி அளவை எட்டியது. இதன் மூலம் நஷ்டத்திலிருந்து மீண்டு தற்போது லாபம் ஈட்டத் துவங்கியுள்ளது.

இதுகுறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் நிறுவனம் ரூ.13.20 கோடி இழப்பை சந்தித்திருந்த நிலையில், நடப்பு நிதியாண்டின் இதே கால அளவில் வரிக்கு பிந்தைய லாபமாக ரூ.6.52 கோடியை ஈட்டியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. செப்டம்பருடன் முடிவடைந்த அரையாண்டு காலத்தில் நிறுவனத்தின் வருவாய் ரூ.1,130.38 கோடியிலிருந்து அதிகரித்து ரூ.1,931.01 கோடியாகியுள்ளது. கடந்த நிதியாண்டின் அரையாண்டு காலத்தில் ரூ.102.35 கோடி இழப்பு ஏற்பட்டிருந்த நிலையில், நடப்பு நிதியாண்டில் நிறுவனம் வரிக்கு பிந்தைய லாபமாக ரூ.31.20 கோடியைப் பெற்றுள்ளது.செப்டம்பர் காலாண்டில் காகித உற்பத்தி 87,164 டன்னிலிருந்து 1,06,749 டன்னாக அதிகரித்துள்ளது. அதேபோன்று, காகித அட்டையின் உற்பத்தியும் 28,659 டன்னிலிருந்து 47,487 டன்னாக உயர்ந்துள்ளது என டி.என்.பி.எல் கூறியுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: