இந்தியாவில் உள்ள கச்சா எண்ணெய் கிடங்குகள் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு குத்தகை

மங்களூரு: இந்தியாவில் உள்ள கச்சா எண்ணெய் சேமிப்பு கிடங்குகள் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு குத்தகைக்கு விடப்பட்டுள்ளன. இந்தியாவில் உள்ள எண்ணெய்க் கிடங்கை, அபுதாபி தேசிய எண்ணெய் நிறுவனத்துக்கு குத்தகை விடுவது தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தானது. கர்நாடக மாநிலத்தில் மங்களூரு, பாடூர் ஆகிய இடங்களிலும், ஆந்திரப் பிரதேசத்தில் விசாகப்பட்டினத்திலும் பூமிக்கு அடியில் கச்சா எண்ணெய்யை சேமித்து வைப்பதற்கான கிடங்குகளை மத்திய அரசு அமைத்துள்ளது.

இந்த கிடங்குகள் மூலம் 10 நாட்களுக்கு தேவையான 53 லட்சம் டன் கச்சா எண்ணெயை சேமித்து வைக்க முடியும். அதாவது மங்களூரில் உள்ள கிடங்கில் 15 லட்சம் டன் எண்ணெய்யையும், பாடூரில் உள்ள கிடங்கில் 25 லட்சம் டன் எண்ணெய்யையும், விசாகப்பட்டினத்தில் உள்ள கிடங்கில் 13.3 லட்சம் டன் எண்ணெய்யையும் இருப்பு வைக்க முடியும். இவற்றில், விசாகப்பட்டினம் எண்ணெய் கிடங்கு ஏற்கெனவே ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனத்துக்கு குத்தகைக்கு அளிக்கப்பட்டு விட்டது.

மங்களூரில் உள்ள சேமிப்புக் கிடங்கு அபுதாபி தேசிய எண்ணெய் நிறுவனத்துக்கு கடந்த பிப்ரவரி மாதம் குத்தகைக்கு விடப்பட்டது. இந்நிலையில், பாடூரில் உள்ள சேமிப்புக் கிடங்கை அபுதாபி நிறுவனத்துக்கு குத்தகைக்கு அளிக்கும் ஒப்பந்தம் தற்போது கையெழுத்தாகியுள்ளது. அவசர காலத்தில், அந்த சேமிப்புக் கிடங்கில் உள்ள எண்ணெய்யை இந்திய அரசு பயன்படுத்திக் கொள்ளும் என்ற நிபந்தனையுடன் ஒப்பந்தம் இறுதிசெய்யப்பட்டுள்ளது. இவ்வாறு கச்சா எண்ணெயை சேமிப்பதன் மூலம் தற்காலிக விலை உயர்வு, விநியோகத்தில் உள்ள சிக்கல்கள் போன்றவற்றை தவிர்க்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: