இமாச்சல பிரதேச மலைப்பாதையில் திடீர் நிலச்சரிவு: போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் அசம்பாவிதம் தவிர்ப்பு

சம்பா : இமாச்சலப் பிரதேசத்தில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த சம்பவம் மக்களை பெரும் அச்சத்தில் ஆழ்த்தியது. சம்பா மாவட்டத்தில் உள்ள மலைப்பாங்கான பாதையில் வாகனங்கள் வழக்கம் போல சென்று கொண்டிருந்தன. அப்போது சிறிய கற்கள் மலையின் உச்சத்தில் இருந்து விழுந்து கொண்டிருந்தது. இதையடுத்து அப்பகுதியில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. அடுத்த சில நொடிகளில் மலைச்சரிவில் இருந்து பெரிய பாறைகளும், காய்ந்த மணலுமாக பெரும் நிலச்சரிவு ஏற்பட்டது. தற்போது அந்தச் சாலையில் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டு, மலை முகடுகளில் ஆய்வுப் பணிகள் நடந்து வருகின்றன. சரியான நேரத்தில் போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் அதிஷ்டவசமாக எந்த வித சேதங்களும் ஏற்படவில்லை.

பெரும்பாலான நிலச்சரிவுகள் பல காரணிகளால் ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. பொதுவாக ஈர்ப்பு சக்தி, சாய்வு உருவாக்கும் பொருட்களின் வலிமையைக் கடந்து செல்லும் போது ஏற்படும். மேலும் அவை மழை, பனி, நீர் மட்டத்தில் மாற்றம், அரிப்பு அல்லது நிலத்தடி நீரின் மாற்றங்கள் ஆகியவற்றால் உருவாகலாம் என கூறப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் பூகம்பங்கள், எரிமலை அல்லது மனித நடவடிக்கைகள் ஆகியவை நிலச்சரிவிற்கு வழிவகுக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இதில் ஏதேனும் ஒரு காரணங்களால் சம்பா மலைப்பாதையில் நிலச்சரிவு ஏற்பட்டுருக்கக்கூடும் என அப்பகுதிமக்கள் கூறியுள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: