மோடியுடன் நட்பு நீடிப்பதற்கு பெருமைப்படுகிறேன்: வெள்ளைமாளிகை தீபாவளி கொண்டாட்டத்தில் டிரம்ப் பேச்சு

வாஷிங்டன்: இந்தியாவுடன் இருதரப்பு ஒத்துழைப்பை தொடர்ந்து மேம்படுத்த நடவடிக்கைகள் எடுத்து வருவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார். வாஷிங்டன் வெள்ளை மாளிகையில் குத்துவிளக்கு ஏற்றிவைத்து தீபாவளியை அவர் கொண்டாடினார். அமெரிக்காவுக்கான இந்திய தூதர் நவ்தேஜ் சர்னா உள்ளிட்டவர்களும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். அப்போது பேசிய டிரம்ப், இந்தியாவுடனான வர்த்தகத்தை மேம்படுத்த அமெரிக்க தீவிர முயற்சிகள் எடுத்து வருவதாக கூறினார். மேலும் பேசிய அவர், மோடியுடன் நட்பு நீடிப்பதற்கு பெருமைப்படுகிறேன்.

நாங்கள் நல்ல வர்த்தகர்கள், அவர்கள்(இந்திய) பேச்சுவார்த்தை நடத்துவதில் வல்லவர்கள் என கூறியுள்ளார். அதுமட்டுமல்லாது மோடியை விரைவில் சந்தித்து பேசவிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அடுத்த மாதம் அர்ஜென்டினாவில் நடைபெறவுள்ள ஜி-20 நாடுகள் உச்சிமாநாட்டில் டிரம்பும் மோடியும் சந்தித்து பேசுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இதுபற்றி அதிகாரப்பூர்வமாக எதுவும் அறிவிக்கப்படவில்லை. எனினும் இந்த சந்திப்பை உறுதிப்படுத்தும் வகையிலேயே விரைவில் மோடியை சந்தித்து பேசவுள்ளதாக டிரம்ப் கூறியுள்ளார் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: