ஆய்வில் தகவல் இந்தியாவில் பயன்படுத்தப்படும் 90 சதவீத பால் பாதுகாப்பானது

புதுடெல்லி: இந்தியாவில் பயன்படுத்தப்படும் பாலில் 90 சதவீத பால் பாதுகாப்பானது என்றும் 10 சதவீத அளவே குடிப்பதற்கு ஏற்றவை அல்ல என ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்தியாவில் தேசிய பால் தரம் குறித்த சர்வே கடந்த மே மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை நடத்தப்பட்டது. 29 மாநிலங்கள் 7 யூனியன் பிரதேசங்களில் உள்ள 50,000க்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட 1100 நகரங்களில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இது தொடர்பாக உணவு பாதுகாப்பு மற்றும் இந்திய தர கட்டுப்பாடு அமைப்பு (எப்எஸ்எஸ்ஏஐ) நேற்று அறிக்கை வெளியிட்டது. ஆய்வறிக்கையை வெளியிட்டு அதன் முதன்மை செயல் அதிகாரி பவன் அகர்வால் கூறியதாவது: பாலின் தரம் குறித்த ஆய்வில் 10 சதவீதக்கும் குறைவான பால் மாதிரிகளே பயன்படுத்த ஏற்றதாக இல்லை. 90 சதவீத பால் குடிப்பதற்கு ஏற்றதாக இருந்தது.

மொத்தமுள்ள 6,432 மாதிரிகளில் 12 மாதிரிகளில் கலப்படம் செய்யப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. பாலில் வெஜிடபிள் ஆயில், சோப்பு கரைசல், குளுகோஸ், யூரியா, அம்மோனியம் சல்பேட் ஆகியவை கலப்படம் செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து சம்மந்தப்பட்ட மாநிலங்களில் உள்ள பால் உற்பத்தி மையங்களில் பாலின் தரத்தை அதிகப்படுத்துவது தொடர்பாக நடவடிக்கை எடுக்கவும் மாநில அரசுகளை வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும் பால் தரம் குறித்து கல்வி மூலமும் பிரசாரம் மூலமும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அப்போது தான் கலப்படத்தை தடுக்க முடியும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: