திகார் சிறையில் கைதிகள் மீது தாக்குதல் தமிழக போலீசாருக்கு ஐேகார்ட் நோட்டீஸ்

புதுடெல்லி: டெல்லி திகார் சிறையில் கைதிகள் மீது தாக்குதல் நடத்தியது தொடர்பாக தமிழ்நாடு போலீசுக்கு நோட்டீஸ் அனுப்ப உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டெல்லி திகார் சிறையில் கைதிகள் இடையே நடந்த மோதலை கட்டுப்படுத்த தமிழ்நாடு சிறப்பு படை போலீசார் தடியடி நடத்தினார்கள். இதில் 15 கைதிகள் படுகாயம் அடைந்தனர். இதுதொடர்பாக டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கில் தமிழ்நாடு சிறப்பு படை போலீசார் மனித உரிமையை மீறி கைதிகள் மீது தாக்குதல் நடத்தினார்கள் என்று கூறப்பட்டு இருந்தது. இந்த பொதுநல வழக்கை டெல்லி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ராஜேந்திர மேனன், நீதிபதி வி.கே.ராவ் அடங்கிய அமர்வு நேற்று விசாரித்தது.

அப்போது திகார் சிறையில் கைதிகள் தாக்கப்பட்டது தொடர்பாக ஆம் ஆத்மி அரசின் விளக்கத்தை கேட்டு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும் சிறைத்துறை இயக்குநர், தமிழ்நாடு சிறப்பு படை, அதன் அதிகாரிகள் உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டனர். இந்த தடியடி தொடர்பாக அடுத்த ஆண்டு ஜனவரி 14ம் தேதிக்குள் விளக்கம் அளிக்கும்படியும் உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: