கஜா புயலால் எந்த பாதிப்பும் இல்லை ஜிசாட்-29 செயற்கைக்கோள் இன்று திட்டமிட்டபடி பாயும்: திருமலையில் இஸ்ரோ தலைவர் பேட்டி

திருமலை: கஜா புயல் காரணமாக ராக்கெட் செலுத்துவதில் எந்த பாதிப்பும் இல்லை என்றும், ஜிசாட்- 29 செயற்கைக்கோள் திட்டமிட்டபடி இன்று விண்ணில் பாயும் என்றும் இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்தார். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இஸ்ரோ தலைவர் சிவன் நேற்று காலை சுவாமி தரிசனம் செய்தார். அவருக்கு கோயில் சார்பில் பிரசாதங்கள் வழங்கப்பட்டது. பின்னர், கோயிலுக்கு  வெளியே அவர் நிருபர்களிடம் கூறியதாவது: ஜிஎஸ்எல்வி மார்க் 3 - டி2 ராக்கெட் ஜிசாட்-29 செயற்கைக்கோளில் இன்று மாலை 5.08 மணிக்கு   திட்டமிட்டபடி விண்ணில் செலுத்தப்படும். இதற்கான கவுன்டவுன் நேற்று மாலை 3.30 மணிக்கு தொடங்கி உள்ளது.

இன்று விண்ணில் செலுத்தப்படும் செயற்கைக்கோள் காஷ்மீர் போன்ற மலைப் பகுதியில் அதிநவீன தகவல் தொழில்நுட்ப பயன்பாட்டிற்கு உதவும். டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்படுகிறது. இந்த செயற்கைக்கோள் மூலமாக சந்திராயன்-2 மற்றும் வருங்காலத்தில் விண்ணில் அனுப்பக்கூடிய செயற்கைக்கோள்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஜிசாட் - 29 செயற்கைக்கோளின் ஆயுட்காலம் 10 ஆண்டுகளாகும். இன்று செலுத்தப்பட உள்ள ராக்கெட் இஸ்ரோவின் மைல் கல்லாக அமையும்.

ராக்கெட் விண்ணில் செலுத்துவதற்காக திட்டமிடப்பட்டுள்ள நேரத்தில், கஜா புயல்  நாகப்பட்டினத்தில் இருந்து வங்கக்கடலில் 400 கிமீ தொலைவில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ராக்கெட் விண்ணில் செலுத்துவதில் எந்த பாதிப்பும் இருக்காது. இருப்பினும் புயலின் திசை மாறும்பட்சத்தில் ராக்கெட் செலுத்துவதில் காலதாமதம் ஆகலாம். இவ்வாறு அவர் கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: