அமைச்சர் செங்கோட்டையன் தகவல் பட்டதாரி ஆசிரியர்களை கொண்டு எல்.கே.ஜி. வகுப்புகளில் பாடம்

கோபி: பட்டதாரி ஆசிரியர்களை கொண்டு அரசு பள்ளிகளில் எல்.கே.ஜி, யூ.கே.ஜி வகுப்புகளில் பாடம் நடத்தப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையம் அருகே உள்ள நம்பியூரில் நெடுஞ்சாலைத்துறை அலுவலக திறப்பு விழா மற்றும் சிறுவலூரில் புதிய ஊராட்சி மன்ற அலுவலகம் திறப்பு விழா நேற்று நடந்தது. நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், செய்தியாளர்களிடம் கூறியதாவது: உள்ளாட்சித்துறையின்கீழ் இயங்கும் பள்ளிகளில் பெயிண்டிங் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும், அரசு பள்ளிகளில் மாணவர்களின் வருகையை கண்காணிக்க பயோமெட்ரிக் முறை 50 பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டுள்ளது. டிசம்பர் மாதத்திற்குள் ஆயிரம் பள்ளிகளில் பயோமெட்ரிக் முறை செயல்படுத்தப்படும். அதேபோல அரசு பள்ளி மாணவர்கள்  1.5 லட்சம் பேருக்கு விரைவில் ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும். நடுநிலைப்பள்ளிகளில் தொடங்கப்பட உள்ள எல்.கே.ஜி., யூ.கே.ஜி. வகுப்புகளுக்கு பட்டதாரி ஆசிரியர்களை கொண்டு பாடம் நடத்தப்படும். மேலும் அரசு பள்ளி மாணவர்களுக்கு யூ டியூப் மூலம் பாடம் நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இணையதள வசதி இல்லாத பகுதிகளுக்கு கேபிள் இணையதளம் ஏற்படுத்தப்பட்டு பாடம் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு செங்கோட்டையன் தெரிவித்தார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: