மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு குறைப்பு

மேட்டூர்:  கர்நாடக மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழையின் தாக்கம் குறைந்துள்ளதால், மேட்டூர் அணைக்கான நீர்வரத்து சரிவதும், அதிகரிப்பதுமாக உள்ளது. நேற்று முன்தினம் விநாடிக்கு 4,005 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை விநாடிக்கு 4,378 கனஅடியாக அதிகரித்துள்ளது.

டெல்டா பாசனத்திற்கு 5,000 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டு வந்தது நேற்று முன்தினம் இரவு 1000 கனஅடியாக குறைக்கப்பட்டது. கிழக்கு, மேற்கு கால்வாயில் 900 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இதையடுத்து நேற்று முன்தினம் 99.86 அடியாக இருந்த நீர்மட்டம் நேற்று 99.88 அடியாக உயர்ந்துள்ளது. நீர் இருப்பு 64.68 டிஎம்சியாக உள்ளது. ஒகேனக்கல் காவிரியில் விநாடிக்கு 4,200 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: