முன்னாள் அதிகாரிகள் குற்றச்சாட்டு பாஜ.வுக்கு ஆதரவாக சிஏஜி

புதுடெல்லி:  பணமதிப்பிழப்பு நடவடிக்கை, ரபேல் ஒப்பந்தம் தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்வதில் மத்திய கணக்கு தணிக்கை அமைப்பு (சிஏஜி) தாமதம் செய்வது குறித்து ஓய்வு பெற்ற ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் உள்ளிட்ட 60 பேர் சிஏஜிக்கு கடிதம் எழுதியுள்ளனர். முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியும் பஞ்சாப் முன்னாள் டிஜிபியுமான ஜூலியோ ரிபெரியோ, முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி அருணா ராய், புனே முன்னாள் போலீஸ் கமிஷனர் மீரான் போர்வாங்கர்,  பிரசார் பாரதி முன்னாள் சிஇஓ ஜவகர் சிர்கார், இத்தாலிக்கான முன்னாள் தூதர் பேபியன் ஆகியோர் கையெழுத்திட்டுள்ள அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: ரபேல் விமான ஒப்பந்தம் தொடர்பாக கடந்த செப்டம்பர் மாதம் சிஏஜி தணிக்கை அறிக்கை தாக்கல் ெசய்திருக்க வேண்டும்.

ஆனால், அது தொடர்பான ஆவணங்களை சிஏஜி இன்னும் ஆய்வு செய்யவில்லை. இதேபோல் மத்திய அரசு மேற்கொண்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கை தொடர்பான கணக்கு அறிக்கையும் குறிப்பிட்ட நேரத்தில் தாக்கல் செய்யப்படவில்லை. தேவையற்ற கால தாமதம் செய்வது கவலையளிக்கிறது. சிஏஜி, மத்திய அரசுக்கு சாதகமாக செயல்படுகிறதோ என்ற கவலையை எங்களுக்கு அளிக்கிறது. இவ்வாறு கடிதத்தில் முன்னாள் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: