மக்களவை தேர்தல் நெருங்கும் நேரத்தில் தடாலடி 1 கோடி பேருக்கு வேலை தரப் போகுது அரசு: பல மாநிலங்களில் 14 தேசிய வேலைவாய்ப்பு மண்டலங்கள் தயார்

புதுடெல்லி: பாஜ ஆட்சிக்கு வந்தால் ஒரு கோடி பேருக்கு வேலை தரப்படும் என்று சொன்னதை நிறைவேற்ற, இப்போது தேர்தல் நெருங்கும் நிலையில்,  தடாலடி திட்டத்தை அமல்படுத்த பிரதமர் மோடி திட்டமிட்டுள்ளார். கடலோர மாநிலங்களில் 14 தேசிய வேலைவாய்ப்பு மண்டலங்களை ஏற்படுத்த மத்திய அரசு தீவிரமாக இறங்கியுள்ளது. கடந்த 2014ம்  ஆண்டு மக்களவை தேர்தலில் வேலைவாய்ப்பு திட்டங்களை பாஜ கட்சி அறிவித்தது. ஆனால், போதுமான அளவில் முதலீடுகளும் பெருகவில்லை; வேலைவாய்ப்பும் அதிகரிக்கவில்லை. பணமதிப்பிழப்பு நடவடிக்கை, ஜிஎஸ்டி போன்ற அதிரடி நடவடிக்கைகளால் பொருளாதாரம் தள்ளாடியது. இப்போது மக்களை தேர்தல் நெருங்கும் நிலையில், பாஜ அரசு  அதிரடியாக தான் வாக்குறுதி அளித்தபடி 1 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் தனியார் - அரசு பங்களிப்பு திட்டத்தை செயல்படுத்த உள்ளது.

  கப்பல் போக்குவரத்து அமைச்சகத்தின் மூலம் இந்த திட்டத்தை செயல்படுத்த உள்ளது. கடலோர மாநிலங்களில் இந்த  தேசிய வேலைவாய்ப்பு  மண்டலங்கள் அமைக்கப்படும். இந்த மண்டலங்களில் 35 தொழிற்பேட்டைகள் அமைக்கப்படும். இந்த தொழிற்பேட்டைகள் மூலம் தான் 1 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு தர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

* கடலோர மாநிலங்களில் உள்ள துறைமுகங்கள், அதில் மேற்கொள்ளப்படும் வர்த்தகம், அதை சார்ந்த தொழிற்பேட்டைகள் ஆகியவற்றின் மூலம் வேலைவாய்ப்புகள் தரப்படும்.

* இந்த  தேசிய வேலைவாய்ப்பு மண்டலங்களில் வர உள்ள தொழிற்பேட்டைகளில் தனியார் பல்வேறு தொழில் சார்ந்த தொழிற்சாலைகள், வர்த்தக மையங்களை அமைக்கலாம்.

* தொழிற்சாலைகள், வர்த்தக நிறுவனங்கள் அமைக்க முன்வரும் தனியாருக்கு குறிப்பிட்ட மாதங்கள் வரை வரி விலக்கு அளிக்கப்படும்.  

* இந்த மெகா தேசிய வேலைவாய்ப்பு மண்டலங்களை உருவாக்க 1 லட்சம் ேகாடி செலவு ஆகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிதிக்கு நிதி ஆயோக்,  செலவு நிதி கமிட்டி ஒப்புதல் பெற ஏற்பாடுகளை அமைச்சகம் செய்து வருகிறது.

* உணவுப்பொருட்கள் தயாரிப்பு, சிமென்ட், உரம், மரப்பொருட்கள், நகைகள், ஜவுளிப்பொருட்கள், தோல்பொருட்கள் உட்பட பல்வேறு பொருட்களை தயாரிக்கும் நிறுவனங்கள் இங்கு அமைக்கப்படும். இந்த நிறுவனங்கள் இங்கிருந்து ஏற்றுமதி செய்யவும் அரசு உதவும்.

* இந்த திட்டங்களுக்கான ஒரு லட்சம் கோடி நிதியை மத்திய, மாநில அரசுகள் பங்கிட்டு ஏற்கும். மேலும், 2  ஆயிரம் ஏக்கர் நிலங்கள் தேவைப்படுகிறது. இது தொடர்பாகவும் மாநில அரசுகள் ஒத்துழைக்க வேண்டும்.

* மேலும் இந்த திட்டத்துக்கு வெளிநாட்டு மற்றும் வெளிநாட்டு நிறுவனங்கள் உதவியையும் அரசு கேட்க உள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: