நடிகர் விஷ்ணு விஷால் விவாகரத்து: மனைவியை பிரிந்தார்

சென்னை: நடிகர் விஷ்ணு விஷால், தனது மனைவி ரஜினியை விவாகரத்து செய்துள்ளார். வெண்ணிலா கபடி குழு, குள்ளநரி கூட்டம், நேற்று இன்று நாளை, வேலையின்னு வந்துட்டா வெள்ளக்காரன், ராட்சசன் உள்ளிட்ட படங்களில் விஷ்ணு விஷால் நடித்துள்ளார். இவர், 2011ல் நடிகரும்,  இயக்குநருமான கே.நட்ராஜின் மகள் ரஜினியை காதலித்து திருமணம் செய்தார். இவர்களுக்கு ஆர்யன் என்ற மகன் இருக்கிறான். சில  மாதங்களுக்கு முன்பு கணவன், மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு  ஏற்பட்டது. இதையடுத்து  விவாகரத்துக்கு விண்ணப்பித்தனர். நேற்று இவர்களுக்கு நீதிமன்றம் விவாகரத்து அளித்தது.

இதுகுறித்து டிவிட்டரில் விஷ்ணு விஷால் கூறியது: நானும் ரஜினியும் கடந்த ஓராண்டாக பிரிந்து வாழ்கிறோம். இப்போது  சட்டபூர்வமாக விவாகரத்து கிடைத்துவிட்டது. எங்களுக்கு அழகான ஆண் குழந்தை உள்ளது. அந்த குழந்தைக்கு நல்ல பெற்றோராக இருப்பதே எங்களது முதல் முக்கியத்துவமாக இருக்கும். அவனுக்கு சிறந்ததை வழங்குவோம். நாங்கள் சில அற்புதமான ஆண்டுகளை சேர்ந்தே கழித்துள்ளோம். இனியும் நல்ல  நண்பர்களாக வாழ்வோம். ஒருவருக்கொருவர் மதிப்பை தருவோம். எங்கள்  குழந்தை மற்றும் எங்கள் குடும்பங்களின் நலன் கருதி எங்கள் தனிப்பட்ட  வாழ்க்கையை மதிக்குமாறு வேண்டுகிறோம் என விஷ்ணு விஷால் கூறியுள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: