காஜல் அகர்வாலை கட்டியணைத்து ஒளிப்பதிவாளர் முத்தம்: சினிமா விழாவில் திடீர் பரபரப்பு

சென்னை: சினிமா விழாவில் திடீரென நடிகை காஜல் அகர்வாலை கட்டியணைத்து ஒளிப்பதிவாளர் முத்தம் கொடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதற்கு சமூக வலைத்தளங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. பெல்லம்கொண்டா ஸ்ரீனிவாஸ், காஜல் அகர்வால், மெஹ்ரின் நடித்துள்ள தெலுங்கு படம் கவச்சம். இந்த படத்தின் டீஸர் வெளியீட்டு விழா ஐதராபாத்தில் நடைபெற்றது. அப்போது விழாவில் காஜல் அகர்வால் பேசிக்கொண்டிருந்தார். படத்தில் நடித்த ஒவ்வொருவரை பற்றியும் அவர் பேசினார். பிறகு பட டெக்னீஷியன்களை புகழ்ந்து பேசி வந்தார். அப்போது பட ஒளிப்பதிவாளரான சோட்டா கே. நாயுடுவை புகழ்ந்து பேசினார். இதைக் கேட்ட சோட்டா நாயுடு திடீரென தனது இருக்கையிலிருந்து எழுந்து காஜலை நோக்கி வந்தார். யாரும் எதிர்பார்க்காத நிலையில் காஜலை கட்டித் தழுவி அவரது கன்னத்தில் முத்தமிட்டார்.

இதனால் விழாவில் சலசலப்பு ஏற்பட்டது. இதை சற்றும் எதிர்பார்க்காத காஜல், சிரித்தபடியே சான்ஸ் பே டான்ஸ் (வாய்ப்பை பயன்படுத்தி ஆட்டம்) என சூழலை சமாளிக்கும்விதமாக சொல்லிவிட்டு, பேச்சை மாற்றினார். காஜலை ஒளிப்பதிவாளர் முத்தமிட்ட படம் சமூக வலைத்தளங்களில் வைரலானது. காஜல் சிரித்தபடி கமென்ட் அடித்தாலும் அவரது அனுமதியின்றி விழாவில் இதுபோல் சோட்டா நடந்துகொண்டது, காஜலுக்கு தர்மசங்கடத்தை கொடுத்திருக்கும் என நெட்டீஸன்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். கடந்த 2004ம் ஆண்டு பொதுமேடையில் நடிகை ஷில்பா ஷெட்டியை கட்டியணைத்து ஹாலிவுட் நடிகர் ரிச்சர்ட் கெரெ முத்தம் கொடுத்தார். அப்போது ஷில்பாவும் சிரித்தபடி, அந்த நிகழ்வை சமாளிக்க முயன்றார். அந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: