வைகை பூர்வீக பாசன பகுதிகளுக்கு தண்ணீர் திறப்பு: முதல்வர் உத்தரவு

சென்னை: மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் உள்ள வைகை பூர்வீக பாசன பகுதிகளுக்கு வைகை அணையில் இருந்து இன்று முதல் தண்ணீர் திறந்துவிடப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார். இதுகுறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:

மதுரை, ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் உள்ள வைகை பூர்வீக பாசன பகுதி III மற்றும் வைகை பூர்வீக பாசன பகுதி II-ல் உள்ள 5 கண்மாய்களுக்கு இன்று முதல் 21.11.2018 வரை உள்ள 7 நாட்களுக்கு 1525 மில்லியன் கனஅடியும்,

இதர வைகை பூர்வீக பாசன பகுதி II-க்கு 23.11.2018 முதல் 27.11.2018 வரை 4 நாட்களுக்கு 631 மில்லியன் கனஅடியும், பகுதி I-ஐ சார்ந்த நான்கு கண்மாய்களுக்கு 28.11.2018 முதல் 30.11.2018 வரை இரண்டு நாட்களுக்கு 69 மில்லியன் கன அடி, விரகனூர் மதகணையில் வழங்கவும், இதர வைகை பூர்வீக பாசன பகுதி I-க்கு 348 மில்லியன் கன அடி தண்ணீரை பகுதி I-ல் உள்ள நிலையூர் கால்வாயில் தேவைக்கேற்ப திறந்து விடுவதற்கும் சேர்த்து வைகை அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிட உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: