தமிழ்நாடு சட்டமன்ற பேரவையின் உறுதிமொழி குழு ஆய்வு கூட்டம்

சென்னை: தமிழ்நாடு சட்டமன்ற பேரவையின் உறுதிமொழி குழுவின் ஆய்வு கூட்டம் நேற்று சென்னையில் நடந்தது. தமிழ்நாடு சட்டமன்ற பேரவை, அரசு உறுதிமொழி குழுவின் ஆய்வுக்கூட்டம் நேற்று சட்டமன்ற உறுப்பினர் குடியிருப்பு வளாகத்திலுள்ள குழுக்கூட்ட அறையில் நடந்தது. அரசு உறுதிமொழிக்குழுவின் தலைவர் இன்பதுரை (ராதாபுரம் சட்டமன்ற உறுப்பினர்) தலைமையில் நடந்த கூட்டத்தில், உறுதிமொழிக்குழுவின் உறுப்பினர்களும் உயர்கல்வி துறையின் முதன்மைச் செயலாளர் மங்கத் ராம் சர்மா, சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் மற்றும் உயர்கல்வி துறையின் உயர் அலுவலர்களும் கலந்து கொண்டனர்.

ஆய்வு கூட்டத்தை தொடர்ந்து அரசு உறுதி மொழிக்குழுவின் தலைவரும், உறுப்பினர்களும், சட்டப்பேரவை செயலாளர், உயர்கல்வித்துறையின் உயர் அலுவலர்களும், சென்னை பெரியார் அறிவியல் தொழில்நுட்ப மையத்திலுள்ள பி.எம். பிர்லா கோளரங்கத்தில் ரூ.10 கோடி மதிப்பீட்டில் நடைபெற்றுவரும் மேம்பாட்டு பணிகளை ஆய்வு செய்தனர். பி.எம். பிர்லா கோளரங்க மையத்தின் செயல் இயக்குநர் சவுந்தராராஜப்பெருமாள், மேற்கண்ட தகவல்கள் மற்றும் மையத்தின் செயல்பாடுகள் குறித்து உறுதிமொழிக்குழுவின் தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கு விளக்கினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: