மாநகராட்சிக்கு பேரிடர் கால மீட்பு பணிக்கு ரூ.4.86 கோடியில் இயந்திரம்: அமைச்சர்கள் வழங்கினர்

சென்னை: பேரிடர் காலத்தில் மீட்பு பணிகளை மேற்கொள்ள சென்னை மாநகராட்சிக்கு ரூ.4.86 கோடி மதிப்புள்ள பல்வேறு இயந்திரங்களை அமைச்சர்கள் நேற்று வழங்கினர். பேரிடர் காலங்களில் உடனடியாக நிவாரணப் பணிகளை மேற்கொள்ளும் வகையில் ரூ.4.86 கோடி மதிப்பீட்டில்  200 மர அறுவை இயந்திரங்கள், 30 நீர் இறைக்கும் பம்புகள், 8 மீ உயரம் உள்ள  மரக்கிளைகளை அகற்றும் 6 இயந்திரங்கள், 100 ஜெனரேட்டர்கள் உட்பட 336 நவீன இயந்திரங்கள் பேரிடர் மேலாண்மை நிதி மூலம் வாங்கப்பட்டது. இந்த இயந்திரங்களை சென்னை மாநகராட்சிக்கு வழங்கும் நிகழ்ச்சி ேநற்று கலைவாணர் அரங்கத்தில் நடந்தது. நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர்  எஸ்.பி.வேலுமணி, மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் மற்றும் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஆகியோர் இணைந்து இயந்திரங்கனை மாநகராட்சிக்கு  வழங்கினர்.

தொடர்ந்து, பேரிடர் காலங்களில் பொதுமக்கள் தொடர்பு கொள்ள வேண்டிய பல்வேறு  துறைகளின் தொடர்பு எண்கள் மற்றும் முகவரி அடங்கிய மாநில பேரிடர் மேலாண்மை திட்டம் 2018 என்ற கையேட்டினை வெளியிட்டனர்.

பிறகு   அமைச்சர் வேலுமணி கூறியதாவது: மாநில பேரிடர் மேலாண்மை நிதி மூலம் பல்வேறு இயந்திரங்கள் வாங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் சென்னை உட்பட அனைத்து இடங்களிலும் உள்ள நீர்நிலைகளை தூர்வாரும் பணி முடிந்துவிட்டது. சென்னையில் 205 இடங்களில் மழை நீர் தேங்கும் என்று  கண்டறியப்பட்டுள்ளது. அங்கு  மீட்பு பணிகளை மேற்கொள்ள அனைத்தும் தயார் நிலையில் உள்ளது. 75 பணியாளர்கள் பணியாற்றும்  கட்டுப்பாட்டு அறை 24 மணி நேரமும் செயல்பட்டு வருகிறது என்றார். இந்நிகழ்ச்சியில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை முதன்மைச் செயலர் சத்யகோபால், செயலர் அதுல்ய மிஸ்ரா, பேரிடர் மேலாண்மைத்துறை ஆணையாளர் ராஜேந்திர ரத்னூ, சென்னை மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன்,  துணை ஆணையாளர்கள் லலிதா, கோவிந்த ராவ், மதுசுதன் ரெட்டி, குமாரவேல் பாண்டியன் உள்ளிட்ட பல்ேவறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: