சில்லி பாயின்ட்...

* புரோ கபடி லீக் தொடரில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் தெலுகு டைடன்ஸ் அணி 28-25 என்ற புள்ளிக் கணக்கில் புனேரி பல்தான் அணியை வீழ்த்தியது.

* இந்திய மகளிர் கால்பந்து அணி முதல் முறையாக ஒலிம்பிக் தகுதி போட்டியின் 2வது சுற்றுக்கு முன்னேறி உள்ளது.
Advertising
Advertising

* ஒடிஷா மாநில விளையாட்டு இயக்கத்தில் அனில் கும்ப்ளே, கோபிசந்த் இருவரும் தங்களை இணைத்துக் கொண்டுள்ளனர்.

* ஹாங்காங் ஓபன் பேட்மின்டன் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு தகுதி சுற்றில் இந்தியாவின் பாருபள்ளி காஷ்யப் 21-7, 12-21, 21-18 என்ற செட் கணக்கில் சீன தைபே வீரர் ஜென் ஹவோவை வீழ்த்தினார்.

* டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் கேப்டனாக ரோகித் ஷர்மா சிறப்பாக செயல்படுகிறார் என்று முன்னாள் நட்சத்திரம் வி.வி.எஸ்.லஷ்மண் பாராட்டி உள்ளார்.

* ஜோர்டான் அணியுடன் நடைபெற உள்ள நட்பு கால்பந்து போட்டியில் இருந்து இந்திய அணி கேப்டன் சுனில் செட்ரி காயம் காரணமாக விலகியுள்ளார்.

* இந்தியா - இத்தாலி அணிகள் மோதும் டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டி கொல்கத்தாவில் பிப்ரவரி 1-2 தேதிகளில் புல்தரை மைதானத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

* ஏடிபி உலக டூர் பைனல்ஸ் தொடரின் ஹெவிட் பிரிவு லீக் ஆட்டத்தில் தென் ஆப்ரிக்காவின் கெவின் ஆண்டர்சன் 6-0, 6-1 என்ற நேர் செட்களில் ஜப்பானின் கெய் நிஷிகோரியை வீழ்த்தினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: