சிலைகளை அடையாளம் காட்ட 21 கோயில் அதிகாரிகள் திருவாரூரில் ஆஜராக உத்தரவு

திருவாரூர்: திருவாரூரில் இன்று நடைபெறும் சுவாமி சிலைகள் சோதனையின்போது சம்பந்தப்பட்ட கோயில்களின் செயல் அலுவலர்கள் மற்றும் அர்ச்சகர்கள் நேரில் ஆஜராகி சிலைகளை அடையாளம் காண்பிக்குமாறு சிலை  கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர். திருவாரூர் தியாகராஜர் கோயிலில் உள்ள சிலை பாதுகாப்பு மையத்தில் தஞ்சை, திருவாரூர் மற்றும் நாகை மாவட்டங்களை சேர்ந்த 650 கோயில்களின் சுமார் 3500 சிலைகள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. இந்த சிலைகளின்  உண்மைத்தன்மை குறித்து ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் தலைமையிலான சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். அதன்படி 3ம் கட்ட சோதனையானது இன்று காலை 8 மணி அளவில்  தொடங்குகிறது.

இதில் திருவாரூர் மற்றும் நாகை மாவட்டங்களை சேர்ந்த கோயில்களின் சிலைகள் சோதனை செய்யப்பட்டு வருகிறது.  இந்த நிலையில் போலீஸ் வெளியிட்ட செய்தி குறிப்பில் 21 கோயில்களின் சிலைகள்  சோதனை செய்யப்படுகின்றன. எனவே சம்பந்தப்பட்ட கோயில்களின் செயல் அலுவலர்கள், அர்ச்சகர்கள் மேற்படி பாதுகாப்பு மையத்தில் காலை 8 மணி முதல் நடைபெறும் சோதனையில் தவறாமல் கலந்துகொண்டு சிலைகளின்  தன்மை மற்றும் அடையாளம் குறித்து தகவல் தெரிவிக்க வேண்டும்  என கூறப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: