திருச்சியில் ராணுவ ஆள்சேர்ப்பு முகாம் 1 மாநில இளைஞர்கள் 2,000 பேர் பங்கேற்பு

திருச்சி: திருச்சியில் ராணுவ ஆள்சேர்ப்பு முகாமில் 1 மாநிலங்களை சேர்ந்த 2ஆயிரம் பேர் பங்கேற்றனர்.திருச்சி 117-வது பிரதேச ராணுவ படைக்கு ஆள்சேர்ப்பு முகாம் மன்னார்புரம் ராணுவ பயிற்சி மையத்தில் நேற்றுமுன்தினம் தொடங்கியது. 57 பொதுப்பணித்துறை சிப்பாய்கள், 1 சிப்பாய் எழுத்தர், 1 சலவை தொழிலாளி ஆகிய  பணியிடங்களுக்கான தேர்வில் பங்கேற்க தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களை சேர்ந்த இளைஞர்களுக்கு கடந்த மாதம் அழைப்பு கடிதம் அனுப்பப்பட்டிருந்தது.முதல் நாளான நேற்றுமுன்தினம், தமிழகத்தின் 15 மாவட்டங்களை சேர்ந்த 7 ஆயிரம் இளைஞர்கள் கலந்து கொண்டனர். இவர்களுக்கு அடுத்தடுத்த தேர்வுகள் நடத்தப்பட்டதில் 169 பேர் தேர்வானார்கள்.

நேற்று 2வது நாளாக கர்நாடகா, கேரளா, ஆந்திரா, ராஜஸ்தான் உள்ளிட்ட 1 மாநிலங்களில் இருந்து 2 ஆயிரம் இளைஞர்கள் கலந்து கொண்டனர். முதலில் உயரமும், பின்னர் உடலில் பச்சை குத்தி உள்ளார்களா என்றும்  சரிபார்க்கப்பட்டது. தொடர்ந்து சான்றிதழ் சரிபார்க்கும் பணி நடந்தது. இதைத்தொடர்ந்து ஓட்டம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல் ஆகிய போட்டிகள் நடத்தப்பட்டன. இவர்களுக்கு அடுத்தடுத்த தேர்வுகள் நடத்தப்பட்டதில், 135 பேர் தேர்வானார்கள். முதல்நாள் தேர்வான 169 பேருக்கு நேற்று இரவு வரை மருத்துவ பரிசோதனை நடந்தது. 2வது நாள் தேர்வான 135 பேருக்கு இன்று மாலை மருத்துவ பரிசோனை நடைபெற உள்ளது. ஆள்மாறாட்டம், மோசடிகள் நடைபெறுவதை  தடுக்கும் வகையில் உடற்தகுதி தேர்வு வீடியோவில் பதிவு செய்யப்பட்டது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: