மாணவி பலாத்கார வழக்கில் கைதான வாலிபர்களை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு

தர்மபுரி: அரூர் அருகே சிட்லிங் கிராமத்தில், மாணவி பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட வழக்கில், சிறையில் அடைக்கப்பட்ட வாலிபர்களை, காவலில் எடுத்து விசாரிக்க கோட்டப்பட்டி போலீசார் முடிவு செய்துள்ளனர்.தர்மபுரி மாவட்டம் அரூர் வட்டம், சிட்லிங் மலை கிராமத்தை சேர்ந்த பிளஸ்2 மாணவி கடந்த 5ம் தேதி, அதே பகுதியை சேர்ந்த ரமேஷ் (22), சதீஷ் (22) ஆகியோரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். காப்பகத்திலிருந்து  மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து கோட்டப்பட்டி போலீசார் வழக்குப்பதிந்து,  சிட்லிங் கிராமத்தை சேர்ந்த சதீஷ் என்பவரை கைது செய்தனர். ரமேஷ் சேலம் நீதிமன்றத்தில்  சரண் அடைந்தார். இந்த வழக்கு பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்காக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சதீஷ், சேலம் நீதிமன்றத்தில் சரண் அடைந்த ரமேஷ் ஆகியோர் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களை,  காவலில் எடுத்து விசாரிக்க கோட்டப்பட்டி போலீசார் முடிவு செய்துள்ளனர். இந்நிலையில் நேற்று தர்மபுரி, அரூர் ஆகிய பகுதிகளில் மக்கள் அதிகாரம் சார்பில், கோட்டப்பட்டி இன்ஸ்பெக்டர் முத்துகிருஷ்ணனை கண்டித்து போஸ்டர் ஒட்டப்பட்டது. இதில், உயிரிழந்த மாணவியின் பெற்றோரிடமும்,  குற்றவாளிகளிடமும் லஞ்சம் வாங்கிய போலீஸ் ஆய்வாளர் முத்துகிருஷ்ணனையும், பாலியல் குற்றவாளிகளையும் கண்டிக்கிறோம் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: