தமிழகத்தில் பன்றிக்காய்ச்சலுக்கு மதபோதகர் உள்பட 6 பேர் பலி

நெல்லை:  தமிழகத்தில் பன்றிக்காய்ச்சல் தீவிரமாக பரவி வருகிறது. தினமும் பலர் பலியாகி வரும் அவல நிலை உள்ளது.நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை சாந்திநகர் 16வது வார்டு பகுதியைச் சேர்ந்தவர் ஜான் வரதன் (9). மதபோதகரான இவருக்கு கடந்த சில தினங்களுக்கு முன் காய்ச்சல் ஏற்பட்டது. தனியார் மருத்துவமனையில் சிகிச்சை  பெற்ற அவர் பாளை ஐகிரவுண்டு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சந்தேகத்தின் அடிப்படையில் பன்றிக் காய்ச்சல் வார்டில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று  அதிகாலை அவர் திடீரென இறந்தார். கோவையில் 2 பேர் பலி: ஈரோடு மாவட்டம் பெருந்துறை பாரதி நகரை சேர்ந்தவர் சுப்ரமணியம் (50). இவர் பன்றிக்காய்ச்சலுக்கு மேல் சிகிச்சைக்காக கடந்த 9ம் தேதி கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு  சிகிச்சை பலனின்றி நேற்றுமுன்தினம் இறந்தார். இதே போல், திருப்பூர் மாவட்டம் கணபதிபாளையத்தை சேர்ந்த ஜெகநாதன்(), பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு கோவை அரசு மருத்துமனையில் நேற்று முன்தினம் உயிரிழந்தார்.

சேலத்தில்: சேலம் மாவட்டம் அரூர் பகுதியை சேர்ந்தவர் செல்வம்(0). இவருக்கு கடந்த சில நாட்களாக காய்ச்சல் பாதிப்பு இருந்துள்ளது. அதே பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் பரிசோதனை செய்த போது,  பன்றிக்காய்ச்சல் இருப்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து மேல்சிகிச்சைக்காக நேற்று கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். அங்கு சிகிச்சை பலன்றி இறந்தார்.விருதுநகர்: விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அண்ணா நகரை சேர்ந்தவர் ஜோசப் (62). இவர் காய்ச்சல் பாதிப்பால், மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். பரிசோதனையில் அவருக்கு, பன்றிகாய்ச்சல்  இருப்பது தெரிய வந்தது. இதனையடுத்து, மதுரை அரசு மருத்துவமனையில் ஜோசப் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை அவர் உயிரிழந்தார்.தேனி மாவட்டம், கடமலைக்குண்டுவை சேர்ந்தவர் பால்ராஜ் மனைவி ஜீவராணி (3). தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் காய்ச்சலுக்கு  பரிசோதனை மேற்கொண்டபோது அவருக்கு பன்றிக்காய்ச்சல் இருப்பது  கண்டறியப்பட்டது. இதையடுத்து ஜீவராணியை, உறவினர்கள் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இரவு இறந்தார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: