சுவிட்சர்லாந்தில் அரியவகை இளஞ்சிவப்பு வைரக்கல் ஏலம்

ஜெனீவா: சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள ஜெனீவா நகரில் மிகவும் அரிய வகையான 19 காரட் இளஞ்சிவப்பு வைரக்கல் ஏலத்திற்கு வந்தது. இந்த ஏலத்தை கிறிஸ்டி ஏல நிறுவனம் நடத்தியது. 19 காரட் எடை கொண்ட இந்த வைரக்கல் 50 மில்லியன் டாலருக்கு ஏலம் போனது. நீள் சதுரவடிவம் கொண்ட இந்த வைரக்கல்லின் இந்திய ரூபாய் மதிப்பு ரூ.363,22,50,000 ஆகும். இந்த வைரத்தை வாங்க உலகின் பெரிய பணக்காரர்கள் பலர் போட்டி போட்டு கொண்டு ஏலம் கேட்டனர். முடிவில் அதிக விலை கொடுத்து ஒருவர் வாங்கினார். ஆனால் அவரது பெயரை வெளியிட கிறிஸ்டி ஏல நிறுவனம் மறுப்பு தெரிவித்துவிட்டது.

கிட்டத்தட்ட 100 ஆண்டுகளுக்கு முன்பு தென் ஆப்பிரிக்க சுரங்கத்தில் இந்த வைரக்கல் கண்டுபிடிக்கப்பட்டது. பொதுவாக வெள்ளை நிறத்தில்தான் வைரங்கள் காணப்படும். ஆனால் இந்த அரியவகை வைரம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஜொலிக்கிறது. முன்னதாக இந்த இளஞ்சிவப்பு வைரம் ஓபன்ஹெய்மர் குடும்பத்திற்கு (Oppenheimer family) சொந்தமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன்பு 15 காரட் வைரக்கல்லை கடந்த நவம்பர் மாதம் ஹாங்காங்கில் நடைபெற்ற கிறிஸ்டியின் ஏலத்தில் 32.5 மில்லியன் டாலருக்கு விற்கப்பட்டதே அதிமாக இருந்தது. தற்போது ஏலத்தில் விற்கப்பட்ட இந்த இளஞ்சிவப்பு வைரக்கலே ஏலத்தில் அதிக விலை கொடுத்து வாங்கப்பட்ட வைரக்கல் ஆகும். நீள் சதுரவடிவம் கொண்ட வைரம் வெள்ளை நிறத்தில் தான் காணப்படும். இந்த இளஞ்சிவப்பு வைரக்கல் மிகவும் அரிதானது என்பதால் இந்த அதிக விலைக்கு ஏலம் போனதாக கிறிஸ்டி ஏல நிறுவனம் தெரிவித்துள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: