நியூஸிலாந்தில் கண்டறியப்பட்ட 26 அடி நீளமான பிரமாண்ட கடல் புழு: வியப்பில் ஆய்வாளர்கள்

வெலிங்டன்: நியூஸிலாந்து நாட்டின் கடல் பகுதியில் சுமார் 26 அடி நீளமுள்ள பிரமாண்டமான கடல் புழு ஒன்று கண்டறியப்பட்டுள்ளது. நியூஸிலாந்தில் எரிமலையால் உருவான வெள்ளைத் தீவு பகுதியில் ஸ்டீவ் ஹாத்வே (56) மற்றும் ஆண்ட்ரூ பட்லே (48) ஆகியோர் கடலுக்குள் சென்று ஆய்வு நடத்திக் கொண்டிருந்தனர். அப்போது வழுவழுப்பான நிலையில் வெள்ளை நிறத்துடன் பிரம்மாண்ட புழு (gelatinous worm) ஒன்று ஆய்வாளர்களின் கவனத்தை ஈர்த்தது. சுமார் 26 அடி நீளம் கொண்ட அந்தப் புழுவின் தலைப்பகுதி தட்டையாகவும், முட்கள் போன்ற அமைப்புடனும் காணப்பட்டது. மேலும் அதன் வாய்பகுதியில் முட்களும் காணப்பட்டதால் ஜெல்லி மீன் குடும்பத்தைச் சேர்ந்ததாக இருக்கலாம் என்ற அடிப்படையில் அவர்கள் ஆய்வு நடந்தி வருகின்றனர்.

அந்த புழுவானது தண்ணீரின் வழியே மென்மையாக நீந்தியும், அவ்வப்போது நடுங்கியும் பின்னர் மெதுவாக சுழன்றும் நீந்தியதை அவர்கள் வீடியோவில் பதிவு செய்துள்ளனர். அதன் பின் இதுபோன்ற ஒரு உயிரினம் இருந்ததைப் பற்றி கேள்விப்பட்டதே இல்லை என்றும் இது குறித்து வீடியோ காட்சிகளையோ அல்லது ஒரு புகைப்படத்தை கூட ஒருபோதும் பார்த்ததில்லை என்றும் ஸ்டீவ் ஹாத்வே கூறியுள்ளார். மேலும் இதனை காணும் பொழுது தன் கண்களை தானே நம்பமுடியாத வகையில் இருந்ததாக அவர் பேட்டியில் தெரிவித்துள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: