ரஃபேல் போர் விமானத்தின் விலை குறைவு தான் : டசால்ட் நிறுவன சி.இ.ஓ தகவல்

பாரிஸ்: இந்தியாவுடனான ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் குறித்து டசால்ட் நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி எரிக் டிராபியர் விளக்கமளித்துள்ளார். இது பற்றி செய்தியாளரிடம் பேசிய அவர்,  டசால்ட் நிறுவனம் தான் ரஃபேல் போர் விமானங்களை தயாரித்து வருகிறது. முதலில் போட்ட ஒப்பந்தப்படி பறக்கும் நிலையில் 18 விமானங்களை அளிக்க வேண்டும். ஆனால் தற்போது போடப்பட்டுள்ள ஒப்பந்தப்படி 36 விமானங்களை விநியோகிக்க வேண்டும். எனினும், 36 விமானங்களின் விலையும், 18 விமானங்களின் விலையும் தற்போது ஒரே அளவில் தான் உள்ளது. விமானங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் போது, விலையும் அதிகரிக்க வேண்டும் என இந்தியா - பிரானஸ் இடையே ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது.

இது இரு அரசுகளுக்கு இடையேயான ஒப்பந்தம் என்பதால், விலை குறைப்பு குறித்து விவாதிக்கப்பட்டு, பின்னர் பிரான்ஸ் அரசு அனுமதியுடன் விமானத்தின் விலையில் 9% குறைக்க ஒப்புக் கொள்ளப்பட்டதாக கூறினார். டசால்ட் மற்றும் ரிலையன்ஸ் நிறுவனம் இடையே உருவான பங்கு நிறுவனத்தில் தான் முதலீடு செய்யப்படுகிறது என்றார். ஒரு நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி இருக்கும் நான் பொய் கூற மாட்டேன். டசால்ட் நிறுவனத்தின் பங்குதாரராக அனில் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் தேர்வு செய்யப்பட்டது எங்கள் நிறுவனத்தின் முடிவு தான். ரிலையன்ஸ் நிறுவனம் தவிர, மேலும் 30 நிறுவனங்கள் எங்கள் பங்குதாரராக உள்ளன என விளக்கம் அளித்துள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: