உக்ரைனில் குழந்தைகளுக்கு ஆயுதப் பயிற்சி: ஐநா சபை மற்றும் பல்வேறு நாடுகள் கண்டனம்

கீவ்: உக்ரைன் நாட்டின் கிளர்ச்சியாளர்கள் குழந்தைகளுக்கு ஆயுதப் பயிற்சி அளிக்கும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதில் பெரும்பாலானவர்கள் 18 வயதுக்கு உட்பட்டவர்கள். மேலும் 8 வயதான சிறுவர்களுக்கும் ஆயுத பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கு ஐநா சபை மற்றும் பல்வேறு நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். உக்ரைனில் உள்ள கிழக்குப் பகுதி தங்கள் நாட்டின் ஒரு பகுதி என ரஷ்யா கூறிக் கொண்டு வருகிறது. இதற்கு ஒரு பிரிவை சேர்ந்தவர்கள் ஆதரவும், மற்றொரு தரப்பினர் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர்.

எதிர்ப்பாளர்கள் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளின் உதவியோடு ரஷ்ய படையினருக்கு எதிராக போர் செய்து வருகின்றனர். இந்நிலையில் டெர்னோபில் எனும் இடத்தில் கிளர்ச்சியாளர்கள் குழந்தைகளுக்கு ஆயுதப் பயிற்சி அளிக்கும் வீடியோ தற்போது வெளியாகி உள்ளது. துப்பாக்கிகளை கையாளுவது மற்றும் குறிபார்த்து சுடுவது போன்ற செயல்களில் குழந்தைகளுக்கு தீவிரமாக பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. பயிற்சியில் விரிவுரைகளின் போது சில சிறுவர்கள் தூங்கிவிடுவதாகவும் மற்றும் சிலர் அதில் தீவிர கவனம் செலுத்தி வருவதாகவும் கிளர்ச்சியாளர்கள் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: