கடத்தல் மையமாக மாறி வரும் திருச்சி : விமான பயணியிடமிருந்து கட்டுக்கட்டாக வெளிநாட்டு பணம் பறிமுதல்

திருச்சி: திருச்சி விமானநிலையத்தில் 17 லட்சம் ரூபாய் மதி்ப்புள்ள வெளிநாட்டு பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. திருச்சி விமானநிலையத்தில் கடந்த சிலநாட்களாக வெளிநாட்டு பணம் மற்றும் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது வெளிநாட்டு பணம் சிக்கியுள்ளது. நேற்றிரவு மலேசிய தலைநகர் கோலாலம்பூருக்கு புறப்பட இருந்த ஏர் ஏசியா விமானத்தின் பயணிகளை மத்திய வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர்.

சந்தேகத்தின் பேரில் விமானத்தில் பயணிக்க தயாராக இருந்த பயணி ரியாஸ் அகமது என்பவரது உடமைகளை சோதனை செய்தனர். அவரது சூட்கேஸ் அடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் ரூ.17 லட்சம் மதி்ப்புள்ள அமெரிக்க டாலர், யூரோ மற்றும் ஆஸ்திரேலியா உள்ளிட்ட வெளிநாட்டு பணத்தை  மத்திய வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் கைப்பற்றினர். இதனையடுத்து ரியாஸ் அகமதுவிடம் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: