பண வீக்கத்தை மதிப்பீடு செய்ய மொபைல் ஆப்ஸ்

புதுடெல்லி: பண வீக்கத்தை மதிப்பீடு செய்ய மொபைல் ஆப்ஸ் கொண்டு வரவும், இந்த பணியை தனியார் நிறுவனங்கள் மூலம் செயல்படுத்தவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்த பணி தனியார் நிறுவனங்கள் மூலம் செயல்படுத்தப்பட உள்ளது.  கடந்த அக்டோபர் மாதத்துக்கான சில்லரை விலை பணவீக்கம் 3.31 சதவீதமாக குறைந்துள்ளதாக மத்திய அரசு புள்ளியியல் துறை தெரிவித்துள்ளது. இது செப்டம்பரில் 3.70 சதவீதமாக இருந்தது.  தொடர்ந்து 3வது மாதமாக பண வீக்கம் சரிந்துள்ளது. இந்நிலையில், மண்டல அளவில் பண வீக்க புள்ளி விவரங்களை சேகரிக்க புள்ளியியல் துறை திட்டமிட்டுள்ளது. இதன்படி மொபைல் ஆப்ஸ் மூலம் உடனடியாக தகவல் பெறப்பட்டு, கிராமங்கள், நகரங்களில் உள்ள விலை வாசியை ஒப்பிட்டு மண்டல வாரியாக விவரங்கள் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: