கச்சா எண்ணெய் உற்பத்தி ஒரு மில்லியன் பேரல் குறைக்க சவூதி அழைப்பு

அபுதாபி: கச்சா எண்ணெய் உற்பத்தியில் நாள் ஒன்றுக்கு 1 மில்லியன் பேரல் குறைக்க வேண்டும் என சவூதி அமைச்சர் வலியுறுத்தியுள்ளார். அபுதாபியில் நடந்த மாநாட்டில் சவூதி அமைச்சர் கலீத் அல் பாலிஹ் கூறுகையில், கச்சா எண்ணெய் விலையை மீண்டும் நிலைநிறுத்த, அடுத்த மாதம் முதல் நாள் ஒன்றுக்கு 500,000 பேரல் குறைக்க உள்ளோம். இதுபோல் உலக எண்ணெய் வள நாடுகள் உற்பத்தியில் ஒரு மில்லியன் பேரல் குறைக்க வேண்டும் என்றார். கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைப்பது தொடர்பாக ஒபெக் மற்றும் ஒபெக் அமைப்பில் இல்லாத நாடுகளை சேர்ந்த எரிசக்தி துறை அமைச்சர்கள் வியன்னாவில் அடுத்த மாத துவக்கத்தில் ஆலோசிக்க உள்ளனர்.

Advertising
Advertising

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: