கோல் இந்தியா பங்கு வாங்காதீங்க யூனியன்கள் வலியுறுத்தல்

கொல்கத்தா: மத்திய அரசு பொதுத்துறை நிறுவன பங்குகளை விற்பனை செய்து நிதி திரட்டி வருகிறது. இந்த வகையில் கோல் இந்தியா நிறுவனத்தில் 5 சதவீத பங்குகள் விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டது. இந்த பங்கு விற்பனை நேற்று தொடங்கியது. வரும் 15ம் தேதி வரை விற்பனை நடக்கிறது. ஓஎப்எஸ் முறையில்  99,00,196 பங்குகள் தள்ளுபடி போக தலா 245.22 என விற்கப்படுகின்றன. இதற்கு தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. பங்கு விற்பனையில் பங்கேற்க வேண்டாம் என தொழிலாளர்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளன. இதுகுறித்து சிஐடியுவின் அகில இந்திய நிலக்கரி தொழிலாளர் கூட்டமைப்பு பொது செயலாளர் பி.பி.ராமதந்தன் நேற்று கூறுகையில், கோல் இந்தியா பங்கு விற்பனைக்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கிறோம். மேற்கண்ட பங்குகளை தொழிலாளர் யாரும் வாங்க வேண்டாம் என்று கேட்டுக்கொண்டுள்ளோம் என்றார்.

Advertising
Advertising

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: