சட்டீஸ்கரில் பலத்த பாதுகாப்புடன் முதல்கட்ட வாக்குப்பதிவு

ராய்ப்பூர்: சட்டீஸ்கரில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் முதல் கட்ட வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது. பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்தனர். சட்டீஸ்கர் மாநிலம் நக்சல் ஆதிக்கம் நிறைந்தது. சட்டப்பேரவை தேர்தலை புறக்கணிக்க வேண்டும் என மாவோயிஸ்ட்டுக்கள் மிரட்டல் விடுத்து வந்தனர். எனவே பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிப்பதற்காக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. மொத்தமுள்ள 90 தொகுதிகளில் முதல் கட்டமாக நேற்று 18 ெதாகுதிகளில் வாக்குப்பதிவு நடந்தது. 16,22,492 பெண்கள், 15,57,435 ஆண் வாக்காளர்கள் என மொத்தம் 31,80014 வாக்காளர்கள் உள்ளனர். 87 மூன்றாம் பாலினத்தவர் வாக்காளர் பட்டியலில் உள்ளனர்.

பாஸ்தர் டிவிஷனுக்கு உட்பட்ட 9 தொகுதிகள் மற்றும் ராஜ்நந்தபோன் மாவட்டத்தில் உள்ள ஒரு ெதாகுதி என 10 தொகுதிகளில் நக்சல்கள் அச்சுறுத்தல் காரணமாக காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி 3 மணி வரை நடைபெற்றது. 4,336 வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டு 19,079 ஊழியர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். நக்சல்கள் அச்சுறுத்தல் காரணமாக பொதுமக்களுக்கு பாதுகாப்பாகவும், தேர்தல்  பணிகள் பாதிக்காத வகையிலும் சுமார் 1.25 லட்சம் போலீசார் மற்றும் துணை  ராணுவத்தினர் குவிக்கப்பட்டு இருந்தனர். எஞ்சியுள்ள கைய்ர்கர், தோன்கர்கர்க், ராஜ்நந்தகோன், டோண்டகர்கான், குஜ்ஜி, பாஸ்தர், ஜக்தல்பூர் மற்றும் சித்ரகூட் ஆகிய 8 தொகுதிகளில் காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெற்றது.   மொத்தம் 70 சதவீத வாக்குகள் பதிவானது.  மீதமுள்ள 72 சட்டப்பேரவை தொகுதிகளில் வருகிற 20ம் தேதி தேர்தல் நடைபெறும்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: