உச்ச நீதிமன்றம் உத்தரவு அயோத்தி வழக்கை முன்னதாக விசாரிக்க கோரிய மனு நிராகரிப்பு: ஜனவரிக்கு விசாரணை ஒத்திவைப்பு

புதுடெல்லி: அயோத்தி அவசர வழக்காக விசாரிக்கக் கோரிய மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது மேலும், வழக்கு விசாரணையை ஜனவரி மாதத்துக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டது. அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தின் உரிமை தொடர்பாக த வழக்கை விசாரித்த அலகாபாத் உயர் நீதிமன்றம், கடந்த 2010ம் ஆண்டு தீர்ப்பளித்தது. சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலப்பகுதியை சன்னி வக்பு வாரியம், நிரோகி அகாரா மற்றும் ராம் லல்லா ஆகிய 3 பிரிவினரும் சமமாக பிரித்துக்கொள்ள உத்தரவிட்டது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு தரப்பினரும் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கை 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்ற வேண்டும் என்று முஸ்லிம் அமைப்புகள் கோரியிருந்தன. ஆனால்,  வழக்கை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றத் தேவையில்லை என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மேலும், இந்த வழக்கை விரைவான விசாரணைக்கு உத்தரவிட்டது. இதற்கான 3 நீதிபதிகளின் புதிய அமர்வு ஒன்றும் தலைமை நீதிபதி தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது. கடந்த சில வாரங்களுக்கு முன், இந்த மனு மீதான விசாரணை நடந்தது. அப்போது, விசாரணை தேதி குறித்து ஜனவரி மாதம் முடிவெடுக்கப்படும் என்று உச்ச நீதிமன்றம் கூறியது. இதற்கிடையே, அயோத்தி வழக்கை ஜனவரிக்கு முன்னதாக விசாரணைக்கு எடுக்க வேண்டும் என்று அகில பாரத ஹிந்து மகா சபா சார்பில், நேற்று உச்ச நீதிமன்றத்தில் தலைமையில் நீதிபதி ரஞ்சன் கோகோய் அமர்வு முன்பு முறையிட்டப்பட்டது. ஆனால், இந்த கோரிக்கையை தலைமை நீதிபதி அமர்வு நிராகரித்து. வழக்கு விசாரணையை ஜனவரி மாதத்துக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: