மது போதை விமானியின் உரிமம் 3 ஆண்டுகள் ரத்து

புதுடெல்லி: மது போதையில் விமானத்தை ஓட்ட வந்த ஏர் இந்தியா நிறுவன விமானியின் உரிமம் 3 ஆண்டுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. டெல்லியில் இருந்து லண்டன் செல்ல வேண்டிய ஏர் இந்தியா விமானம் நேற்று முன்தினம் பறப்பதற்கு தயாராக இருந்தது. இந்த விமானத்தை விமானி ஏ.கே.கத்பாலியா ஓட்ட இருந்தார்.  வழக்கமாக விமானத்தை ஓட்டும் முன்பு விமானிகள் முழு உடல் தகுதியுடன் இருக்கிறார்களா என்பதை அறிய போதை பரிசோதனை நடத்தப்படும். இதன்படி, விமானியிடம் சோதனை நடத்தப்பட்டது. அப்போது அவர் அளவுக்கு அதிகமாக மது அருந்தியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனால் அவர் விமானத்தை ஓட்டுவதற்கு தடை விதிக்கப்பட்டது. தொடர்ந்து விமானியிடம் விசாரணை நடத்தப்பட்டது. இதையடுத்து, கத்பாலியாவின் விமானம் ஓட்டுவதற்கான 3 ஆண்டுகள் முடக்கப்பட்டது. இதனால் அவர் இந்த காலத்தில் எந்த விமானத்தையும் இயக்க முடியாது. ஏற்கனவே அவர் கடந்த ஆண்டும் அவர் மது போதையில் விமான ஓட்ட வந்து சிக்கியுள்ளதும் தெரியவந்துள்ளது. ஆனால், அவர் சோதனையில் பங்கேற்காமல் சென்றதும் தற்போதைய விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: