ராகுலுடன் டிவிட்டர் சிஇஓ சந்திப்பு

புதுடெல்லி: காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை டிவிட்டர் சிஇஒ ஜாக் டோர்சே நேற்று டெல்லியில் சந்தித்து பேசினார். சமூக வலைதளமான டிவிட்டரை உலகம் முழுவதிலும் 33 ேகாடி பயனாளர்களை கொண்டுள்ளது.  டிவிட்டர் சிஇஓ ஜாக் டோர்சே முதல் முறையாக கடந்த வாரம் இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் வந்தார். இந்நிலையில் டெல்லியில் நேற்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை அவர் சந்தித்து பேசினார்.  போலி செய்திகளை தடுப்பதற்கு மேற்கொள்ளப்பட்டுள்ள பல்வேறு நடவடிக்கைகள் குறித்து சிஇஒ ஜாக் ராகுல் காந்தியிடம் விளக்கமளித்தார். டிவிட்டர் சிஇஓ ஜாக் டோர்சே  ராகுல் பேசிக்கொண்டிருக்கும் புகைப்படத்தை ராகுல் தனது பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இது தொடர்பாக ராகுல்காந்தி தனது பதிவில், “டிவிட்டர் வலைதளம் மிகவும் வேகமாக வளர்ந்து வருகிறது. ஆரோக்கியமான உரையாடல்கள் மற்றும் போலி செய்திகளை தடுப்பதற்கு மேற்கொள்ளகூடிய நடவடிக்கைகள் குறித்து சிஇஒ ஜாக் விளக்கமளித்தார்” என்று கூறியுள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: