50 கோடி சொத்து சேர்த்த மோட்டார் வாகன உதவி ஆய்வாளர்: 2 உதவியாளர்களுடன் கைது

திருமலை: வருமானத்திற்கு அதிகமாக 50 கோடி சொத்து சேர்த்ததாக மோட்டார் வாகன உதவி ஆய்வாளர் உட்பட 3 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். ஆந்திராவின் விசாகப்பட்டினத்தில் மோட்டார் வாகன உதவி ஆய்வாளராக இருந்தவர்  வெங்கட்ராவ். இவர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வந்த புகாரின்பேரில், கடந்த சில நாட்களுக்கு முன்பு இவரது வீடு,  அலுவலகம், டிரைவர், உறவினர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் சோதனை நடத்தினர்.   அப்போது கோடிக்கணக்கான மதிப்புள்ள சொத்து பத்திரங்கள், 3 கிலோ தங்க நகைகள், 10 கிலோ வெள்ளி பொருட்களை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து டிரைவர் மோகன்ராவிடம் விசாரித்தபோது, வெங்கட்ராவ், தனது உறவினர் பெண் மூலம் கோபாலபட்டணத்தில் உள்ள மெக்கானிக் சீனிவாசராவின் வீட்டில்  2 சூட்கேஸ்களை பதுக்கியது தெரியவந்தது.

அதன்பேரில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று முன்தினம் இரவு சீனிவாசராவ் வீட்டிற்கு சென்று சூட்கேஸ்களை பறிமுதல் செய்தனர். அதில் 15.50 லட்சம், இரண்டே கால் கிலோ தங்க நகைகள், 1 கோடி மதிப்புள்ள சொத்து பத்திரங்கள் இருப்பதை கண்டுபிடித்தனர். இதனை தொடர்ந்து வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக மோட்டார் வாகன உதவி ஆய்வாளர் வெங்கட்ராவ் மற்றும் உடந்தையாக இருந்த கார் டிரைவர் மோகன்ராவ், சூட்கேஸ்களை பதுக்கிய மெக்கானிக் சீனிவாசராவ் ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.   வருமானத்துக்கு அதிகமாக சுமார் 50 கோடிக்கு மேல் வெங்கட்ராவ் சொத்து சேர்த்து சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: