பிரேசில் கிராண்ட் பிரீ ஹாமில்டன் சாம்பியன்

சா பாலோ: பிரேசில் கிராண்ட் பிரீ பார்முலா 1 கார் பந்தயத்தில் மெர்சிடிஸ் அணி வீரர் லூயிஸ் ஹாமில்டன் சாம்பியன் பட்டம் வென்றார். மிகவும் விறுவிறுப்பாக அமைந்த இப்போட்டியில்,  ஹாமில்டன் 1 மணி, 27 நிமிடம், 9.066 விநாடியில் பந்தய தூரத்தைக் கடந்து முதலிடம் பிடித்தார். நடப்பு சீசனின் உலக சாம்பியன் பட்டத்தை அவர் ஏற்கனவே கைப்பற்றிவிட்டது குறிப்பிடத்தக்கது. ரெட் புல் ரேசிங் வீரர் மேக்ஸ் வெர்ஸ்டாப்பன் 2வது இடமும் (+1.469 விநாடி), பெராரி வீரர் கிமி ரெய்கோனன் (+4.764 விநாடி) 3வது இடமும் பிடித்தனர். பெராரி அணி நட்சத்திர வீரர் செபாஸ்டியன் வெட்டல் 6வதாக வந்தார்.

இந்த போட்டியின்போது வெர்ஸ்டாப்பன் ஓட்டிய கார் மீது போர்ஸ் இந்தியா மெர்சிடிஸ் வீரர் எஸ்டபென் ஓகான் ஓட்டிய கார் மோதியதால், வெர்ஸ்டாப்பனின் வெற்றி வாய்ப்பு பாதிக்கப்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த அவர், போட்டி முடிந்ததும் ஓகானிடம் சென்று கடுமையான வாக்குவாதம் செய்ததுடன் தாக்க முயற்சி செய்தது பரபரப்பை ஏற்படுத்தியது. 20 பந்தயங்களின் முடிவில் ஹாமில்டன் (383 புள்ளி), வெட்டல் (302), ரெய்கோனன் (251) முதல் 3 இடங்களில் உள்ளனர். நடப்பு சீசனின் கடைசி பந்தயமாக அபு தாபி கிராண்ட் பிரீ 23ம் தேதி தொடங்கி 25ம் தேதி வரை நடைபெறுகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: