260 கி.மீ. வேகத்தில் இயங்குகிறது ஜப்பானின் ஷின்கான்சென் புல்லட் ரயில்: 2022ல் இந்தியாவுக்கு வரப்போகிறது

டோக்கியோ:  ஜப்பானில் இயக்கப்படும் ஷின்கான்சென் புல்லட் ரயில் மணிக்கு 260 கி.மீ. வேகத்தில் இயக்கப்படுகிறது. ரயில் பெட்டிகள் மிகவும் சுகாதாரமான முறையில் பராமரிக்கப்படுகிறது. இந்தியாவில் டெல்லி மற்றும் உத்தரப் பிரதேசத்தின் ஜான்சி இடையே கதிமான் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படுகின்றது. மணிக்கு 160 கி.மீ. வேகத்தில் இயக்கப்படும் இந்த ரயில்தான் இந்தியாவில் இயக்கப்படும் அதிவேக விரைவு ரயில்.

ஆனால், ஜப்பானில் இயக்கப்படும் ஷிகான்கான்சென் புல்லட் ரயிலானது மணிக்கு 260 கி.மீ. வேகத்தில் இயக்கப்படுகிறது. 54 ஆண்டுகளாக இயக்கப்படும் இந்த ரயிலில் இதுவரை ஒரு சிறு விபத்து, உயிரிழப்பு கூட ஏற்பட்டதில்லை. ஹகாடாவிலிருந்து  குமமோட்டோ நகருக்கு இயக்கப்படும் இந்த ரயில் அழகான இயற்கை காட்சிகள் நிறைந்த வழியாக பயணிக்கிறது. சாகுரா ஷின்கான்சென் என்ற பெயரில் இந்த ரயில் அழைக்கப்படுகிறது. இதன் ஜப்பானிய அர்த்தம் பூத்துகுலுங்கும் செர்ரி பூக்கள் என்பதாகும். ஷின்கான்சென் ரயிலில் மிகவும் தூய்மையாக பராமரிக்கப்படுகிறது. 8 பெட்டிகளை கொண்ட இந்த ரயில் மிக சுகாதாரமாக காணப்படுகிறது.

ஒரு சிறிய காகித துண்டு, பிளாஸ்டிக் பாட்டில்கள், என சிறு குப்பையை கூட ரயில் பெட்டிகளில் காணமுடிவதில்லை. ஒரு முறை இந்த ரயிலில் பயணிப்பதற்கு 3,196 ரூபாய் செலவாகும். இத்தனைக்கு பயணம் முழுவதும் உணவுப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதும் குறிப்பிடத்தக்கது. ரயிலில் குஷன் இருக்கைகள், மரத்தால் ஆன மடக்கும் வசதி கொண்ட டேபிள்கள்,  சார்ஜ் செய்வதற்கான வசதி, இரண்டு புகைப்பிடிக்கும் கம்பார்ட்மென்ட்கள்  உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன. இந்தியாவில் புல்லட் ரயில் 2022ம் ஆண்டு நடைமுறைக்கு வர வாய்ப்புள்ளது. இப்போது திட்டமிடப்பட்டுள்ள கட்டண முறைப்படி, ஜப்பானின் விரைவு ரயிலை காட்டிலும் இந்திய புல்லட் ரயிலில் செல்வதற்கான பயணசெலவு மிகவும் குறைவாகும். மும்பை மற்றும் அகமதாபாத் இடையே 508 கி.மீ. தூரத்திற்கு பயணிக்க ரூ.3000 கட்டணம் வசூலிக்க திட்டமிடப்பட்டுள்ளது. பன்டா-குர்லா காம்ப்ளக்ஸ் மற்றும் தானே இடையே செல்வதற்கு ரூ.250 ஆகிறது. ஜப்பானின் ஷின்கான்சென் புல்லட் ரயில்தான், இந்தியாவில் புல்லட் ரயிலாக வர உள்ளது. இதனால் 2022 வரை காத்திருக்க வேண்டும்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: