வடபழனியில் 700 கிலோ குட்கா பறிமுதல் பிரபல கள்ளச்சந்தை வியாபாரி கைது

சென்னை: தடை செய்யப்பட்ட 700 கிலோ குட்காவை குடோனில் பதுக்கி வைத்து கள்ளச்சந்தையில் விற்பனை செய்து வந்த வியாபாரியை போலீசார் கைது செய்தனர். தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, மாவா உள்ளிட்ட போதை வஸ்துகளை விற்பனை செய்யும் நபர்கள் கைது ெசய்ய போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் அனைத்து காவல் நிலைய இன்ஸ்பெக்டர்களுக்கும் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, போலீசார் சென்னை மாநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் அதிரடி சோதனை நடத்தி குற்றவாளிகளை கைது ெசய்து வருகின்றனர். அந்த வகையில், வடபழனி, அசோக் நகர் பகுதியில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் போதை வஸ்துக்கள் பதுக்கி விற்பனை செய்யப்பட்டு வருவதாக அசோக் நகர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி அசோக் நகர் போலீசார் ேநற்று வடபழனி சிவன் கோயில் தெருவில் உள்ள ஒரு வீட்டில் உள்ள குடோனில் அதிரடி சோதனை நடத்தினர்.

அப்போது, 700 கிலோ குட்கா மற்றும் போதை வஸ்துகள் மூட்டை மூட்டையாக அடிக்கை வைக்கப்பட்டிருந்தது. இதையடுத்து குடோனில் குட்காவை பதுக்கி வைத்திருந்த வாலிபரை போலீசார் பிடித்தனர். பின்னர் அவரை போலீசார் காவல்நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது, அதே பகுதியை சேர்ந்த அப்துல் ரகுமான் (30)  என்றும், இவர் ஏற்கனவே 10 டன் குட்கா வெளி மாநிலத்தில் இருந்து கடத்தி பூந்தமல்லி பகுதியில் பதுக்கி வழக்கில் கைது செய்யப்பட்டவர் என்றும் தெரியவந்தது. அதைதொடர்ந்து அப்துல் ரகுமானை போலீசார் கைது செய்தனர். பின்னர்  அவர், குடோனில் பதுக்கி வைத்திருந்த 700 கிலோ குட்கா மற்றும் போதை வஸ்துகளை பறிமுதல் செய்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி டாக்டர் கதிரவன் மற்றும் சதாசிவம் ஆகியோரிடம் போலீசார் ஒப்படைத்தனர். அதை தொடர்ந்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் குட்கா பதுக்கி வைத்திருந்த குடோனுக்கு சீல் வைத்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: