அர்ஜென்டினாவில் 12 மணி நேரத்தில் 11,000 பீட்சாக்கள் தயாரித்து கின்னஸ் சாதனை

ப்யூனஸ் அய்ர்ஸ்  : அர்ஜென்டினாவின் ப்யூனஸ் அய்ர்ஸ் நகரில் உலக சாதனை முயற்சிக்காக நூற்றுக்கணக்கான சமையல் கலைஞர்கள் ஒரே இடத்தில் ஒன்று கூடி பீட்சா தயாரிப்பில் ஈடுபட்டனர். இத்தாலியில் 12 மணி நேரத்தில் 10,065 பீட்சாக்கள் உருவாக்கப்பட்டதே இதுவரை உலக சாதனையாக இருந்து வந்தது. இந்த சாதனையை முறியடித்து கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடிப்பதற்கான நிகழ்ச்சி அர்ஜென்டினாவின் ப்யூனஸ் அய்ர்ஸ் நகரில் நடைபெற்றது. இதில் சுமார் 400 சமையற் கலைஞர்கள் ஒன்று கூடி பீட்சா தயாரிப்பும் மும்மரமாக ஈடுபட்டனர்.

இந்த சாதனைக்காக 3000 கிலோ மாவு , 3100 கிலோ தக்காளி சாஸ், 150 லிட்டர் எண்ணெய் உள்ளிட்ட பொருட்கள் பயன்படுத்தப்பட்டன. ஒவ்வொரு பீட்சாவும் சுமார் 12 அங்குல விட்டத்தில் இருக்கும்படி உருவாக்கப்பட்டுள்ளது. கடைசியில் 11,000 பீட்சாக்கள்  உருவாக்கப்பட்டு புதிய கின்னஸ் சாதனை படைக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சி முடிவடைந்த பின் பீட்சாக்கள் விற்கப்பட்டு அதில் கிடைத்த தொகை உள்ளூர் அறக்கட்டளை நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: