இலங்கை சுழற்பந்து வீச்சாளர் அகிலா தனஞ்ஜெயா பந்துவீச்சில் சந்தேகம் : சோதனைக்குட்படுத்த ஐசிசி கெடு

துபாய்: இங்கிலாந்துக்கு எதிராக காலேயில் நடந்த முதல் டெஸ்ட் கிரிக்கெட்டின் போது இலங்கை சுழற்பந்து வீச்சாளர் அகிலா தனஞ்ஜெயாவின் பந்து வீச்சானது, விதிமுறைக்கு மாறாக சந்தேகம் அளிக்கும் வகையில் இருந்ததாக கள நடுவர்கள் புகார் அளித்தனர். இதனையடுத்து அடுத்த 14 நாட்களுக்குள் அவர் தனது பந்துவீச்சு முறையை சோதனைக்குட்படுத்த சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் கெடு விதித்துள்ளது.

எனினும் சோதனை முடிவு வெளியாகும் வரை அவர் சர்வதேச போட்டிகளில் தொடர்ந்து பந்து வீச அனுமதிக்கப்படுவார் என ஐசிசி கூறியுள்ளது .இதனிடையே இலங்கை கேப்டன் சன்டிமால், இடுப்பு பகுதியில் காயத்தால் அவதிப்பட்டு வருவதால் வரும்  14–ம் தேதி தொடங்கும் இங்கிலாந்துக்கு எதிரான 2–வது டெஸ்டில் இருந்து விலகியுள்ளார். அவருக்கு பதிலாக சுரங்கா லக்மல் கேப்டனாக செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடதத்க்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: