சாலைகளை பராமரிப்பதே கிடையாது: டி.சடகோபன், தமிழ்நாடு முற்போக்கு நுகர்வோர் மைய தலைவர்

நெடுஞ்சாலைத்துறை, போக்குவரத்து துறை, காவல்துறை, உள்ளாட்சி அமைப்புகளில் ஒருங்கிணைப்பு இல்லாதது தான் சாலை விபத்திற்கு காரணம். ஒரு துறையில் இந்த பிரச்சனையை எடுத்து வைத்தோம் என்றால் தங்களுக்கு சம்பந்தம் இல்லை என்று அரசு துறைகள் தட்டி கழிக்கின்றன. வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட வாகனங்கள் சந்தைக்கு வரும்போது, அந்த வாகனத்தை எப்படி உபயோகப்படுத்த வேண்டும் என்று உபயோகிப்பாளர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும். எப்படி டிரைவிங் ஸ்கூலில் வாகனம் ஓட்டுவதற்கு பயிற்சி அளிக்கப்படுகிறோ, அதே போன்று வாகன உற்பத்தியாளரும், விற்பனையாளரும் உபயோகிப்பாளர்களுக்கு கற்றுக் கொடுப்பது இல்லை. சாலை போடும்போது பாதசாரிகள் நடப்பதற்கு வழி, இருசக்கர வாகனங்கள் செல்ல வழி, நான்கு சக்கர வாகனங்களுக்கு வழிகள்  ஏற்படுத்த வேண்டும். சாலை கட்டமைப்பு பணிகளை இப்படி, இப்படி வடிவமைக்க வேண்டும் என்று பேப்பரில் தான் இருக்கிறதே தவிர செயல்பாட்டுக்கு கொண்டு வரப்படவில்லை. சாலை விபத்து நடந்து இருந்தால் மாவட்ட நிர்வாகத்திற்கு தான் பொறுப்பு. எனவே, மாவட்ட நிர்வாகம் போக்குவரத்து துறை, காவல்துறை, நெடுஞ்சாலைத்துறை உள்ளிட்ட பல்வேறு அரசு துறைகளை அழைத்து கூட்டம் நடத்த வேண்டும். இக்கூட்டத்தில் சாலை விபத்துக்களை தடுக்க என்ன மாதிரியான நடவடிக்கை எடுக்கலாம் என்று விவாதிக்க வேண்டும்.

இக்கூட்டத்தில் தன்னார்வ குழுக்களும் கலந்து கொள்கிறோம். அப்படி நடக்கும் கூட்டத்தில் பல துறைகளை சேர்ந்த அதிகாரிகள் வருவது இல்லை. அவரவர்களுக்கு அவரவர் வேலை தான் முக்கியமாக தெரிகிறது. ஆனால், சாலை விபத்தை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எண்ணமில்லை. கர்நாடக மாநிலத்தில் அனைவரது டிரைவிங் லைசென்ஸ் பார்கோடு உடன் வடிவமைக்கப்படுகிறது. சிக்னலில் எந்த இடத்திலாவது தவறு செய்தால், அவர்களுக்கு மெமோ தன்னிச்சையாக வீட்டிற்கு தபாலில் வரும். முதலில் மெமோ, இரண்டாவது அபராதம், மூன்றாவதாக லைசென்ஸ் ரத்து செய்யப்படுகிறது. அப்படி ஒரு சிஸ்டம் தமிழ்நாட்டில் வரவில்லை. 10 ஆண்டுகளாக இந்த சிஸ்டம் வரப்போவதாக சொல்லி வருகின்றனர். ஆனால், தற்போது வரை நடைமுறைக்கு வரவில்லை. இது வந்தால் பெரும்பான்மையான விபத்துகள் எப்படி நடக்கிறது என்று கண்டுபிடிக்க உதவியாக இருக்கும். இந்த சிஸ்டம் தமிழ்நாட்டிற்கு கட்டாயம் கொண்டு வர வேண்டும். இந்த திட்டத்தை தனியார் பங்களிப்பின் மூலம் கூட அரசு செய்யலாம்.

 சாலைகளில் சிக்னலுக்கு முன்பாக இன்னும் இத்தனை மீட்டரில் சிக்கனல் வரப்போகிறது, லெவல் கிராசிங் வரப்போகிறது என தெரிவிக்கும் வகையில் போர்டுகள் வைக்கப்பட வேண்டும். ஸ்பீடு பிரேக்கர் அறிவிப்பு பலகையும் வைக்கப்படவில்லை. நெடுஞ்சாலைத்துறையில் சாலை போட்டதோடு சரி முறையாக பராமரிப்பு பணி மேற்கொள்ளவில்லை. இதனால், சாலைகள் ஆங்காங்கே குண்டும், குழியுமாக தான் இருக்கிறது. சாலைகளில் சுங்கச்சாவடி வைத்து வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கின்றனர். ஆனால், அந்த சாலைகளை முறையாக பராமரிப்பதில்லை. இதை கண்காணித்து சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். நெடுஞ்சாலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சாலைகளிலும், தேசிய நெடுஞ்சாலைகளிலும் சாலை  விபத்து ஏற்படத்தான் செய்கிறது. சாலை கட்டமைப்பு ஒழுங்காக இருந்தால் விபத்துக்கள் ஏற்படுவதை தவிர்க்கலாம். வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட வாகனங்கள் சந்தைக்கு வரும்போது, அதை எப்படி உபயோகப்படுத்த வேண்டும் என்று உபயோகிப்பாளர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: