×

ஹெல்மெட்டை பாரமாக நினைக்கக்கூடாது: அருண், சென்னை மாநகர போக்குவரத்து காவல்துறை கூடுதல் ஆணையர்

இந்தியா முழுவதும் சென்று பார்த்ததில் தமிழகத்தில் தான் சாலைகள் நன்றாக இருக்கிறது. மற்ற மாநிலங்களில் பெரும்பாலான நகரங்களில் சாலைகளின் தரம் நன்றாக இருக்காது. தமிழகத்தில் உள்ள சாலைகள் நன்றாக இருப்பதால் பலர் விதிகளை மீறி அதிவேகத்தில் வாகனங்களில் செல்கின்றனர். இது விபத்துக்கு வழிவகுக்கிறது. விபத்தை தடுக்க வேண்டுமென்றால் சாலை விதிகளை கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும். குறிப்பாக, சாலைகளில் செல்லும் வாகன ஓட்டிகள் ஹெல்மேட் போடுவது முக்கியம். டெல்லி, மும்பை போன்ற நகரங்களில் ஹெல்மெட்டை கட்டாயம் அணிந்து செல்கின்றனர். ஆனால் தமிழகத்தை பொறுத்தவரை குறிப்பாக சென்னையில் பாதி பேர் கூட ஹெல்மெட் போடுவதில்லை. அதை பாரமாக  நினைக்கிறார்கள். சென்னை உயர் நீதிமன்றம் கூட கட்டாயம் ஹெல்மெட் போட வேண்டும் என்று அறிவுறுத்தியது. ஹெல்மெட் போடாவிட்டால் விபத்தின்போது உயிருக்கு பாதுகாப்பு இல்லை என்று தெரியாமல் பலர் இருக்கின்றனர். இருசக்கரவாகனத்தில் செல்வோர் ெஹல்மெட் போடாமல் பயணிப்பதுதான் 50 சதவீதம் இறப்பிற்கு காரணமாக இருக்கிறது. அதேசமயம் ஹெல்மெட் போடுவதால் விபத்தில் உயிரிழப்பு 1 சதவீதம் தான்.

 ஹெல்மெட் போடாதவர்கள் மீது ஆயிரத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் போடப்படுகிறது. ஆனால் மக்களிடம் ஹெல்மெட் போட வேண்டும் என்ற சுயக்கட்டுப்பாடு என்பது இல்லை. அதனால்தான் உயர் நீதிமன்றமே மக்கள் ஹெல்மெட் போட்டுதான் ஆக வேண்டும் என்று இறுதி உத்தரவை பிறப்பித்துள்ளது. ஹெல்மெட் போட வேண்டும் என்று பொதுமக்களுக்கு தான் விழிப்புணர்வு இருக்க வேண்டும் என்று நீதிமன்றமே கூறியுள்ளது.
 சாலை விபத்து ஏற்படாத வகையில் விழிப்புணர்வு வாரம் என்று ஒவ்வொரு வருடமும் நடத்தப்படுகிறது. இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் 1 லட்சத்துக்கும் அதிகமான பள்ளி குழந்தைகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும் சாலை விபத்து குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று விளம்பர பதாகைகள், துண்டு பிரசுரம் வழங்குதல் போன்ற பணிகளில் ஈடுபட்டுள்ளோம். சாலை விபத்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது குறித்து விளம்பர குறும்படம்  எடுக்கப்பட்டுள்ளது. அந்த குறும்படத்தில் மக்களிடம் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்பது போன்று விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. கடந்த ஆண்டை விட 20 சதவீதம் சாலை விபத்துகளில் உயிரிழப்பு குறைந்துள்ளதாக கூறப்படுகிறது. இன்னும் சாலை விபத்துகளை தடுக்க வேண்டும் என்பதற்காக விழிப்புணர்வு ஏற்படுத்துதல், மோட்டார் வாகன சட்டம் கடுமையாக கடைபிடிக்கப்படுகிறது.

ேமலும் ஒரு பகுதியில் விபத்து ஏற்பட்டால் அந்த விபத்து எதனால் ஏற்படுகிறது என்று கண்டறியப்பட்டு மறுபடியும் விபத்து ஏற்படாத வகையில் உடனடியாக சரிசெய்யப்படுகிறது. சென்னையில் விபத்து நடைபெறும் பகுதிகளில் அந்த இடங்களில் அறிவிப்பு பலகை, ஒளிரும் ஸ்டிக்கர்கள் வைக்கப்படுகிறது. அதனால்தான் சாலை விபத்து குறைந்துள்ளது.  இதுபோன்று தான் தமிழகம் முழுவதும் சாலைகள் விபத்து ஏற்படும் பகுதிகள் கண்டறியப்பட்டு அந்த இடங்களில் சாலை மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. குறிப்பாக, ஒளிரும் ஸ்டிக்கர்கள், ஸ்பீட் பிரேக்கர் அமைக்கப்படுகிறது. அறிவிப்பு பலகை வைக்கப்படுகிறது. இதனால்தான் இப்போது சாலை விபத்துகள் அதிகமாக குறைந்துள்ளது. டெல்லி, மும்பை போன்ற நகரங்களில் ஹெல்மெட்டை கட்டாயம் அணிந்து செல்கின்றனர். தமிழகத்தை பொறுத்தவரை குறிப்பாக சென்னையில் பாதி பேர் கூட ஹெல்மெட் போடுவதில்லை.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Arun ,Chennai Metropolitan Police , helmet,Arun, Commissioner, Chennai Metropolitan Police
× RELATED வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி...