×

தமிழகத்துக்கு முதல் இடம் சாலை விபத்திலா சாதனை படைப்பது?

* பெருகிவரும் விபத்துகளை தடுப்பதற்கான தீர்வு என்ன?

தமிழகத்தில் சாலை விபத்துகள் சர்வசாதாரணமாக நடந்து வருகிறது. தினசரி நடக்கும் இயல்பான நிகழ்வு என்ற அளவில் விபத்து இங்கு சகஜத்தன்மையாகி விட்டது. விலைமதிக்க முடியாத மனித உயிர்கள் சாலை விபத்துகளில் கொத்துக்கொத்தாக துள்ளத்துடிக்க மடிவது நாளுக்குநாள் பெருகி வருகிறது. கடந்த ஆண்டின் கணக்குப்படி நாடு முழுவதும் 4 லட்சத்து 64 ஆயிரத்து 910 சாலை விபத்துகள் நடந்துள்ளன. இதில் தமிழகம்தான் முதலிடத்தில் இருக்கிறது. 65 ஆயிரத்து 562 விபத்துகள். அடுத்த இடம் மத்திய பிரதேசத்துக்கு. 53 ஆயிரத்து 399. இதற்கு அடுத்த இடம் கர்நாடகாவுக்கு. இதே ஆண்டில் சாலை விபத்துகளினால் நாடு முழுவதும் நடந்த உயிரிழப்புகளின் எண்ணிக்கை 1 லட்சத்து 47 ஆயிரத்து 913. இதில் தமிழகத்துக்கு இரண்டாவது இடம். 16 ஆயிரத்து 152. முதல் இடம் உ.பி.க்கு. 20 ஆயிரத்து 124. சாலை விபத்துகள் பெருகுவதற்கு பல காரணிகள் உள்ளன.

பொறுப்பின்றி அதிவேகத்தில் வாகனங்களை ஓட்டுவது, போக்குவரத்து விதிகளை துளியும் மதிக்காமல் இருப்பது, தரமற்ற சாலைகள், பழுதடைந்த பேருந்துகள், கறாரான விதிமுறைகள் ஏதுமில்லாது தகுதி இல்லாதவர்களுக்கெல்லாம் டிரைவிங் லைசென்ஸ்களை வாரி வழங்குவது என இந்த பட்டியல் நீண்டுகொண்டே போகிறது. மிக முக்கிய சமூக பிரச்னையான சாலை விபத்துகளையும் அதை குறைப்பதற்கான, தவிர்ப்பதற்கான, தடுப்பதற்கான வழிமுறைகள் குறித்தும் இங்கே நான்கு கோண கருத்துகள்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : road accident ,Tamil Nadu , First place, Tamil Nadu, road accident,
× RELATED சத்தியமங்கலம் அருகே திம்பம் மலைப் பாதையில் விபத்து: 3 பேர் உயிரிழப்பு