முதுமலையில் இருந்து கோவைக்கு 2 கும்கி பயணம்

ஊட்டி: கோவை மாவட்டம், தடாகம் பகுதியில்  இரு காட்டு யானைகள் ஊருக்குள் நுழைந்து பயிர்களை சேதம் செய்து வருகின்றன. இந்த காட்டு யானைகளை கும்கி யானைகள் மூலம் விரட்ட வனத்துறை முடிவு செய்தது. இதற்காக,  நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகம், தெப்பக்காடு யானைகள்  முகாமிலிருந்து ஜம்பு, விஜய் என்ற இரு கும்கி யானைகளை கோவை கொண்டு செல்ல  முடிவு செய்யப்பட்டது. இதன்படி, முதுமலை புலிகள் காப்பகத்தில் இருந்து இவ்விரு கும்கி யானைகளும் நேற்று மதியம் கோவைக்கு லாரியில் அனுப்பி  வைக்கப்பட்டன.    

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

× RELATED தேர்தல் செலவின சிறப்பு பார்வையாளர் திடீர் டெல்லி பயணம்