தீபாவளியின்போது விதிமீறல் 166 ஆம்னி பஸ் உரிமையாளர்களிடம் 4.12 லட்சம் அபராதம் வசூல்

வேலூர்:  தீபாவளி பண்டிகைக்காக வெளியூர்களில் பணிபுரிபவர்கள், மாணவர்கள் என்று  லட்சக்கணக்கான மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்றனர். இதற்காக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள்  இயக்கப்பட்டன. அதேசமயத்தில் ஆம்னி பஸ்களும் அதிகளவில் இயக்கப்பட்டன. ஆம்னி பஸ்களில் அதிக கட்டணம் வசூலிப்பதாக வழக்கமான புகார்கள் வந்த வண்ணம் இருந்தது. இதனை கண்காணிக்க தமிழகம் முழுவதும் போக்குவரத்து  ஆணையர் உத்தரவின்பேரில் கண்காணிப்பு குழுவினர் டோல்கேட்களில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அதேபோல் வேலூர், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் துணை போக்குவரத்து ஆணையர் செந்தில்நாதன் உத்தரவின்பேரில் ஆர்டிஓ ராமகிருஷ்ணன், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் வெங்கடராகவன், ராஜசேகர் ஆகியோர்  தலைமையிலான அதிகாரிகள் வேலூர், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள டோல்கேட்களில் கடந்த 2ம் தேதி முதல் நேற்று காலை 10 மணி வரை ஆம்னி பஸ்களை சோதனையிட்டனர். மொத்தம் 7 நாட்களில் 1,040 ஆம்னி பஸ்களை சோதனையிட்டனர். இதில் விதிமீறிய 166 பஸ் உரிமையாளர்களுக்கு சோதனை அறிக்கை வழங்கி ₹4 லட்சத்து 12 ஆயிரத்து 600 அபராதமாக வசூலிக்கப்பட்டது. இதில் ₹3,408  வரியும் வசூலிக்கப்பட்டது என்று போக்குவரத்துத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

× RELATED பெண்களை விமர்சித்த விவகாரம்: ஹர்திக், ராகுலுக்கு அபராதம்